திரு கணேஷ் அவர்களின் விருப்பப்பாடல். நல்ல இனிமையான பாடல்.
திரைப் படம்: சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977)
குரல்கள்: S P B, P சுசீலா
பாடல்: வாலி
இசை: இளையராஜா
நடிப்பு: சிவகுமார், ஸ்ரீதேவி
http://www.divshare.com/download/15919260-7b4
ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ ரதி தேவி அம்சமோ
ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம் தமிழ் கவிதை பாடினான்
ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான்
தமிழ் கொண்ட வைகை போலே திருமேனி நடை போட
கார் வேந்தன் நாளும் ஊர்கோலம் போகும் தேர் போலும் இடையாட
பனி போல கொஞ்சும் உன்னை பார்வைகள் எடை போட
நீ கொஞ்சம் தழுவ நான் கொஞ்சம் நழுவ நாணங்கள் தடை போட
மேலாடையாய் நான் மாறவோ
கூடாதென நான் கூறவோ
வா மெல்ல வா
ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ ரதி தேவி அம்சமோ
கடல் நீலம் கொண்ட கூந்தல் கண்ணா நீ பூச்சூட
மடல் கொண்ட வாழை கடன் தந்த தேகம் மன்னா நீ கொண்டாட
மாமல்லன் என்னை கொஞ்சும் சிவகாமி நீயாக
காலங்கள் தோறும் அழியாத காதல் சிற்பங்கள் உருவாக
ஊடல் என்னும் ஒரு நாடகம்
கூடல்தனில் அரங்கேறிடும்
வா நெருங்கி வா
ஒரு காதல் நாயகன்
மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம்
தமிழ் கவிதை பாடினான்
4 கருத்துகள்:
ஒரு வாரமா நெட் பக்கம் வர முடியலை. (வாத்யார் பாட்டெல்லாம் போட்ருக்கீங்க போல) எனக்குப் பிடித்த எஸ்.பி.பி.யின் இந்த இனிமையான பாடலைத் தந்த உங்களுக்கு... என் இதய நன்றி!
அருமையான பாடல் இனிமையான பாடல். வாழ்த்துக்கள்.
அருமையான பாடல் தந்தமைக்கு நன்றி சார்!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
சிறுவயதில் கேட்டது. இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது. கேட்க இனிக்கிறது. எஸ்பிபாலா சுசீலா அம்மா குரல் இனிமை.
கருத்துரையிடுக