பின்பற்றுபவர்கள்

வியாழன், 29 டிசம்பர், 2011

தாமதம் செய்யாதே தோழி நல்ல தருணத்தை இழக்காதே சொன்னதை மறக்காதே


நமது இந்த இதழிலில் முதன் முறையாக திருமதி G வரலக்ஷ்மி அவர்களின் குரல் ஒலிக்கிறது. நல்ல வளமான குரல். அன்பர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.

திரைப் படம்: வடிவுக்கு வளைக் காப்பு (1962)
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி
இசை: K V மகாதேவன்
இயக்கம்: A P நாகராஜன்
குரல்: G வரலக்ஷ்மிhttp://www.divshare.com/download/16470819-1cd
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தாமதம் செய்யாதே தோழி
தாமதம் செய்யாதே தோழி
நல்ல தருணத்தை இழக்காதே
சொன்னதை மறக்காதே
தாமதம் செய்யாதே தோழி
நல்ல தருணத்தை இழக்காதே
சொன்னதை மறக்காதே
தாமதம் செய்யாதே தோழி

தானாக வீடு தேடி தலைவன் வந்த போது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தானாக வீடு தேடி தலைவன் வந்த போது
சரியாக கவனியாமல் இருப்பதும் ஆகாது
சரியாக கவனியாமல் இருப்பதும் ஆகாது
தாமதம் செய்யாதே தோழி
நல்ல தருணத்தை இழக்காதே
சொன்னதை மறக்காதே
தாமதம் செய்யாதே தோழி

கன்னல் சுவை விருந்து அவர் உண்ண வேண்டாமா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கன்னல் சுவை விருந்து அவர் உண்ண வேண்டாமா
களிப்பினிலே சொர்க்கத்தையும் காணவேண்டாமா
தன்னை மறந்தே அவரும் மயங்க வேண்டாமா
தன்னை மறந்தே அவரும் மயங்க வேண்டாமா
உன் தலைவி அதை பார்த்து மனம் மகிழ வேண்டாமா
உன் தலைவி அதை பார்த்து மனம் மகிழ வேண்டாமா

தாமதம் செய்யாதே தோழி
நல்ல தருணத்தை இழக்காதே
சொன்னதை மறக்காதே
தாமதம் செய்யாதே தோழி

1 கருத்து:

கணேஷ் சொன்னது…

சீர்காழி கோவிந்தராஜன் அவர்களைப் போல, ஜி.வரலக்ஷ்மி அவர்களின் குரலும் ‘வெண்கலக் குரல்’ என்று சொல்லத் தக்க அருமையான சாரீரம்! இப்பாடலைக் கேட்டுப் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி + என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு!

கருத்துரையிடுக