பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

பூ மேடையோ பொன் வீணையோ நீரோடையோ அருவியோ தேன் காற்றோ பூங்குயிலோ


நல்லதொரு இனிமையானப் பாடல் இனிமையான இசை மற்றும் குரல்களுடன்.

திரைப் படம்: ஆயிரம் பூக்கள் மலரட்டும் (1986)
குரல்கள்: S P B, S ஜானகி
இசை: V S நரசிம்மன்
நடிப்பு: மோகன், சீதா
இயக்கம்: E ராமதாஸ்
http://www.divshare.com/download/16178728-bda

பூ மேடையோ பொன் வீணையோ
நீரோடையோ அருவியோ தேன் காற்றோ பூங்குயிலோ
நீ பேச வா
நீ பேசினால் அவை யாவும் தானே
வாய் மூடுமே  பதில்  பதில்

பூ மேடை நான் பொன் வீணை நான்
நீரோடை நான் அருவி நான் காற்று நான் பூங்குயில் நான்
நான் பேசவோ
நான் பேசினால் மலர் தூவும் சோலை
பாய் போடுமே  அதில்  அதில்

பூ மேடையோ

நீலாம்பரி ராகமே ஏங்குமே
நீ பாடினால் பூமியே தூங்குமே
நீலாம்பரி ராகமே ஏங்குமே
நீ பாடினால் பூமியே தூங்குமே

என் ராகம் கால்கள் தள்ளாடும்
உன் ஆசை பூ சூடும்
கல்யாண காலம் பொற்காலம்
கண் போடும் தம்பூலம்
காதலின் ஓடமே கைகளில் ஓடுமே
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
நீ மூடும் மேலாடை நான்...

பூ மேடை நான் பொன் வீணை நான்
நீரோடை நான் அருவி நான் காற்று நான் பூங்குயில் நான்
பூ மேடை நான்

உன் பார்வைகள் பூசுதே சந்தனம்
உன் வார்த்தைகள் ஆனதே குங்குமம்
உன் பார்வைகள் பூசுதே சந்தனம்
உன் வார்த்தைகள் ஆனதே குங்குமம்

வந்தேனே காதல் சன்யாசி
என்னாகும் நீ யோசி
உன் ஆசை வானில் பொன்மேகம்
என்னாகும் என் தேகம்
பாடலின் பல்லவி பாடுவாள் பைரவி
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
நீயாகவே ஓடோடி வா

பூ மேடையோ பொன் வீணையோ
நீரோடையோ அருவியோ தேன் காற்றோ பூங்குயிலோ
நீ பேச வா
நான் பேசினால் மலர் தூவும் சோலை
பாய் போடுமே  அதில்  அதில்
பூ மேடை நான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக