சமீபத்திய பாடல்களில் ஒரு புதிய இசையமைப்பாளரின் அழகான பாடல். என்னை பொருத்தவரை திரு உண்ணிகிருஷ்ணன் குரலை அன்றே இந்த பாடலைப் போல உடைத்து பாடி இருந்தால் இன்னும் கொஞ்சம் காலம் திரை இசை உலகில் இருந்திருப்பார். மூக்கினால் பாடுவது போல பாடுவார் என்பது எனது கருத்து. கேட்க் இனிமையான பாடல்.
திரைப் படம்: முறை மாப்பிள்ளை (1995)
குரல்கள்: உண்ணி கிருஷ்ணன், சித்ரா
இசை: ஸ்வராஜ்
பாடல்: வாலி
இயக்கம்: சுந்தர் சி
நடிப்பு: அருண் குமார், கீர்த்திகா
உனை மறந்து வேறு ஒரு பெண்ணா
என் அன்பே நானா
உடல் பிரிந்து வாழும் ஒரு வாழ்வா
நீ இன்றி நானா
நிலவை விட்டு நீங்கிடாது வானம்
நாளும் பாடும் நெஞ்சம் உன் ராகம்
உனை மறந்து வாழும் இளம் பெண்ணா
என் அன்பே நானா
உயிர் பிரிந்து வாழும் ஒரு வாழ்வா
நீ இன்றி நானா
சீமை விட்டு சீமை வந்து வேறொருத்தி
யாரும் உன்னைத் தொடக் கூடாது
மேலை நாட்டு மாமன் இங்கு மாலை கட்டி வந்தால்
இந்தக் குயில் கூவாது
ஏன் இன்னும் சந்தேகம் எந்தன் கண்மணி
உன் சொந்தம் என்றென்றும் என்னை நம்பு நீ
உனகெனத்தான் பிறந்தேன் வளர்ந்தேன்
சொந்தம் நீதானே
உனை மறந்து வேறு ஒரு பெண்ணா
என் அன்பே நானா
உடல் பிரிந்து வாழும் ஒரு வாழ்வா
நீ இன்றி நானா
காதல் என்னும் மூன்றெழுத்தை வேதம் என்று நாளும்
உள்ளம் இங்கு ஓதாதோ
தூங்குகின்ற நேரம் இங்கு வாங்குகின்ற மூச்சும்
உந்தன் பெயர் கூறாதோ
ஒன்றல்ல ரெண்டல்ல எந்தன் ஆசைகள்
என்னென்று நான் சொல்ல நெஞ்சின் ஓசைகள்
கனி இதழ்கள் எடுத்தால் கொடுத்தால்
மோகம் தீராதோ
உனை மறந்து வாழும் இளம் பெண்ணா
என் அன்பே நானா
உயிர் பிரிந்து வாழும் ஒரு வாழ்வா
நீ இன்றி நானா
உனைத் தவிர வேறு ஏது எண்ணம்
வானம் பூமி யாவும் என் சொந்தம்
1 கருத்து:
பாடும் அருமை. உங்கள் கருத்தும் அருமை சார்!
பகிர்விற்கு நன்றி!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"
கருத்துரையிடுக