பின்பற்றுபவர்கள்

புதன், 7 டிசம்பர், 2011

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான என் நேரமும் உன் ஆசை போல் மலரல்லவோ


திரு தாஸ் அவர்களின்  விருப்பமான பாடல் இது. அப்போது இந்த பாடல் பெண்களுக்கு மிகப் பிடித்தமான பாடலாக இருந்தது.

திரைப் படம்: தீர்க்க சுமங்கலி (1974)
இசை: M S விஸ்வனாதன்
குரல்: வாணி ஜெயராம்
இயக்கம்:A C திருலோகசந்தர்
நடிப்பு: முத்துராமன், K R விஜயா
http://www.divshare.com/download/16332119-5d7
http://www.divshare.com/download/15998367-3f1


மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
என் நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள் மேனியை தொட்டு தாலாட்டுது
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி
கொஞ்சி பேசியே அன்பை பாராட்டுது

என் கன்னன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம் தான்
கையோடு நான் அல்லவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ் வேளையில் உன் தேவை என்னவோ

மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ

பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம்
பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம்
மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது
ஓராயிரம் இன்ப காவியம்
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது
நம் இல்லம் சொர்க்கம் தான்
நம் உள்ளம் வெல்லம் தான்
ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும்
உன்னோடுதான் நான் தேடிக் கொண்டது

மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
என் நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ

3 கருத்துகள்:

கணேஷ் சொன்னது…

வாணி ஜெயராமின் குரல் ‌எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது பாடல்களில் எவர்கிரீன் டாப் ஸாங்கை இப்போது உங்கள் மூலம் மீண்டும் கேட்டு ரசித்தேன். நன்றி!

சிநேகிதி சொன்னது…

அழகான அருமையான பாடல்

ரசிகன் சொன்னது…

மனம் மயங்கும் பாடல். பகிர்வுக்கு நன்றி.

கருத்துரையிடுக