பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா


இளமையின் தூது. இனிமை இசையில், வித்தியாசமான கோணத்தில் ஒரு காதல் கடிதம்

திரைப் படம்: சேரன் பாண்டியன் (1991)
இயக்கம்: K S ரவிகுமார்
நடிப்பு: சரத் குமர், ஆனந்த் பாபு, ஸ்ரீஜா
குரல்கள்: மனோ, ஸ்வர்னலதா
இசை/பாடல்: சவுந்தர்யன்




http://www.divshare.com/download/16323622-93c



http://www.divshare.com/download/16323993-c45

காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா
காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா

உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே
உங்கள் கடிதம் வந்ததால்
இன்பம் எங்கும் பொங்குதே
உன்னை அள்ள வந்ததால் இன்ப காதலே
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே

உயிரின் உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய் அறிந்தே தொடர்ந்தேன்

வானும் நிலவும் போலவே
மலரும் மணமும் போலவே
கடலும் அலையும் போலவே
என்றும் வாழவேண்டுமே
உண்மை அன்பு ஒன்றுதான்
இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்

காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா

பயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில்
உனது பெயர் தான் அதிகம் எனக்கு

வானம் கையில் எட்டினால்
அங்கும் உன்னை எழுதுவேன்
நிலவை கொண்டு வந்துதான்
பெயரில் வர்ணம் தீட்டுவேன்

உண்மை அன்பு ஒன்றுதான்
இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்

காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே
காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு

வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்த பாடலைக் கேட்டுப் பல நாள் ஆகி விட்டது. பகிர்விற்கு நன்றி Sir!
என் தளத்தில்:

"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

கருத்துரையிடுக