பின்பற்றுபவர்கள்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

உலகம் முழுதும் பழைய ராத்திரி உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி

இளமையின் கீதம் ஒன்று


திரைப் படம்: நூறாவது நாள் (1984)
இயக்கம்: மணிவண்ணன்
இசை: இளையராஜா
நடிப்பு: மோஹன், நளினி
குரல்கள்: K J Y, வாணி ஜெயராம்
பாடல் வரிகள்: வாலிEmbed Music Files - Audio Hosting -
உலகம் முழுதும் பழைய ராத்திரி

உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி

உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி

தழுவும் தோள்களில்
நழுவும் பூங்கொடி

ல ல ல ல ல லலலலா

உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி

எப்போதும் இல்லாமல் இருதயம் மேளம் கொட்ட
நான்
தொட தொட மனசுக்குள்
தீம்
தரி கிட

பொன்மேனி எங்கெங்கும் வெட்கம் வந்து சேலை கட்ட
நான்
மலர்ந்திட ரகசிய
தீ
வளர்ந்திட

முத்தம் கொடுத்து முத்து குளிக்க
வித்தையும் கத்து குடுக்க நான் உன்னை பார்க்க
நீ என்னை பார்க்க

கட்டி பிடிக்கும் காதல் சுகத்தில்
கட்டில்களும் பூ பூக்க

உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி

கட்டிக் கொண்ட தாமரைகள்
காலையிலே கண் விழிக்க
தேன்
வடிந்தது
அடடடா
ஏன்
விடிந்தது

சங்கீத முத்தங்களை
மெல்ல மெல்ல நான் நினைக்க
நீ
சிவந்ததும்
வானம் கூட
ஏன்
சிவந்தது

சொர்கம் கண்ணிலே
தட்டுபட்டது
தொட்டவுடன் கட்டு பட்டது

பூங்காற்றாய் வீசு
ஓர் வார்த்தை பேசு

பெண்ணின் மனசு பேச நினைத்தால்
மாதம் ஒன்று போதாது

உலகம்
ல ல ல
முழுதும்
ல ல ல
பழைய ராத்திரி
ல ல ல
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி


தழுவும் தோள்களில்
நழுவும் பூங்கோடி
ல ல ல ல லலலா

உலகம்
ல ல ல
முழுதும்
ல ல ல
பழைய ராத்திரி
ல ல ல
உனக்கும்
ல ல ல
எனக்கும்
ல ல ல
புதிய
ல ல ல
ராத்திரிகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக