பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ

வழக்கம் போல MSV மற்றும் SPB இணைந்து கலக்கிய  இன்னொரு இளமையான பாடல். மிக நாசுக்காக பெண்ணை அழகாக வர்ணித்திருக்கிறார் கவிஞர்

படம்: பயணம் (1976)
நடிப்பு: விஜயகுமார், சுஜாதா, ஜெயசித்திரா
இயக்கம்: வியட்னாம் வீடு சுந்தரம்
தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள் தானன்றோ

தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள் தானன்றோ
தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ

வெள்ளித் தேரில் உள்ள சிலைக்கு என் நாள் திரு நாளோ
மின்னல் மேனி மேகக் குழலால் தன்னை அறிவாலோ
வெள்ளித் தேரில் உள்ள சிலைக்கு என் நாள் திரு நாளோ
மின்னல் மேனி மேகக் குழலால் தன்னை அறிவாலோ
பால்வண்ணப் பூமுல்லை பார்த்தால் போதாதோ
பாலைவனத்தில் காவிரியாறு பைரவி பாடாதோ

தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள் தானன்றோ
தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ

கம்பன் வந்தால் காவியம் பாடக் கற்பனை ஒரு கோடி
கண்ணன் கண்ட ராதை கூட ஈடில்லடி
தத்தித் தாவும் சித்திர முத்து சிப்பியில் விளையாடி
தழுவப் போகும் தலைவன் யாரோ காதல் உறவாடி

தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ

பட்டுச் சேலை கட்டும் சோலை வாடுது கண்பட்டு
பன்னீர் சொம்பும் முன்னால் நின்று வாவென்றது
பட்டுச் சேலை கட்டும் சோலை வாடுது கண்பட்டு
பன்னீர் சொம்பும் முன்னால் நின்று வாவென்றது
எத்தனை சொல்லி இத்தனை அழகை நான் பாடுவேன்
இன்பத் தமிழில் உள்ளதையெல்லாம் அள்ளித் தருகின்றேன்

தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள் தானன்றோ

4 கருத்துகள்:

அப்பாதுரை சொன்னது…

அரை டிராயர் நாட்களை நினைவு படுத்திய பாடல். மறந்தே போன பாடல்களை ஜீனி போல எங்கிருந்தோ எடுத்து போடுறீங்களே.. நன்றி. உங்களுக்கு ஏதாவது பட்டம் கொடுக்கணுமே?

Unknown சொன்னது…

அய்யா அப்பாதுரை அவர்களே, என்னை வள்ளுவர், தொல்காப்பியன் என்றெல்லாம் அழைக்காதீர்கள் என்று சொல்வேன் என்று எதிர் பார்க்கிறீர்களா?

பெயரில்லா சொன்னது…

good collections, thank u

Amudu சொன்னது…

great please keep it up

கருத்துரையிடுக