பின்பற்றுபவர்கள்

புதன், 23 பிப்ரவரி, 2011

ஆயிரம் காலத்து உறவு..புது உறவு..என்றும் ஆனந்தமே ஆசை

வித்தியாசமான குரல் தேடுதலில் ஒரு நல்ல பாடல்.


திரைப் படம்: நம்பிக்கை நட்சத்திரம் (1975)
நடிப்பு: மு க முத்து, ஸ்ரீவித்யா, மு க ஸ்டாலின்
இயக்கம்: திருமலை மகாலிங்கம்
இசை: லக்ஷ்மி நாராயணன்
பாடியவர்கள்: மு க முத்து, ஜானகிhttp://www.divshare.com/download/14143790-7f3


ஆயிரம் காலத்து உறவு..புது உறவு..
என்றும் ஆனந்தமே ஆசை அலை மோதும்
இனி நாம் காணும் பேரின்பமே

ஆயிரம் கனவுகள் வரும் நாள் இந்தத் திரு நாள்
இன்பத் தேனூறுதே நாளும் சுவைக் கூடும்
இரு உள்ளங்கள் பண் பாடுதே..

ஆயிரம் காலத்து உறவு....
வானில் மேகம் கூடும் இந்த மண்ணில் மழையை தூவும்..
வானில் மேகம் கூடும் இந்த மண்ணில் மழையை தூவும்..

ஆணும் பெண்ணும் சேரும் இந்த வாழ்வின் பொருளை கூறும்..

இதழோரம்..

கதை பேசும்..
இள நெஞ்சம் உறவாடும்..
ஆயிரம் காலத்து உறவு..

கொடியை முல்லைத் தழுவும்..
மணக் கோலம் உறவில் தொடங்கும்..

உள்ளம் பிரிவதில்லை..
இந்த உணர்வும் அழிவதில்லை..
உள்ளம் பிரிவதில்லை..
இந்த உணர்வும் அழிவதில்லை..

இரவோடு..

உறவாட..

இரவோடு..

உறவாட..
தடையேதும் கிடையாது..

ஆயிரம் காலத்து உறவு..புது உறவு..
என்றும் ஆனந்தமே ஆசை அலை மோதும்
இனி நாம் காணும் பேரின்பமே
கா ஹா ஹா ஹா ஹாஹாஹா
1 கருத்து:

அப்பாதுரை சொன்னது…

கேட்டதேயில்லை. முத்து குரல் பரவாயில்லையே?

கருத்துரையிடுக