பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன..

TMS எப்போழுதுமே சிவாஜிக்காக அழுத்தம் திருத்தமாக பாடல்களை பாடுவார். இந்த பாடலை கண்னை மூடிக் கொண்டு கேட்டால் சிவாஜி பாடியது போலவே இருக்கும். K பாலசந்தர் இயக்கத்தில் சிவாஜி நடித்த படம் இது மட்டும்தான் என்று நினைக்கிறேன். அது போல K V மகாதேவன் இசையில் K பாலசந்தர் படம் இது மட்டும்தான் என்றும் எனக்கு ஞாபகம். மிக மென்மையான இசையில் அருமையான பாடல்.

திரைப்படம்: எதிரொலி (1970)
இயக்கம்: K பாலசந்தர்
நடிப்பு: சிவாஜி, K R விஜயா
இசை: K V மகாதேவன்Play Music - Audio Hosting -

குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன..
குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன..
அதை மங்களச் சிரிப்பில் மாலைகளாக கட்டி கொடுப்பதென்ன...என்ன..

குங்குமச் சிமிழில் ..ஓ ஓ ஓ..

நெய் தடவி நீவிவிட்டு நிழல் போல் குழல் முடித்தாள்..
மையெழுதி திருத்திவிட்டு மலர் போல் விழி மலர்ந்தாள்..

கையசைய காலசைய கொடி போல் நடை பயின்றாள்..
கையசைய காலசைய கொடி போல் நடை பயின்றாள்..
கண்ணிரெண்டில் மேடைக் கட்டி நடம் புரிந்தாள் நகை புரிந்தாள்..

குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன..
அதை மங்களச் சிரிப்பில் மாலைகளாக கட்டி கொடுப்பதென்ன...என்ன..
குங்குமச் சிமிழில் ..ஓ ஓ ஓ..

பொய்யிடையில் ஆடைக் கட்டி பொன்னழகு மூடி வைத்து..
தையல் வந்து மையலுக்கு தையலிட்டு பார்ப்பதென்ன..

கையணைக்க மெய்யணைக்க கரும்பாய் சுகம் இனிக்க..

கண் மயங்கி பெண் மயங்கி கிடந்ததென்ன நடந்ததென்ன..

குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன..
அதை மங்களச் சிரிப்பில் மாலைகளாக கட்டி கொடுப்பதென்ன...என்ன..
குங்குமச் சிமிழில் ..ஓ ஓ ஓ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக