பின்பற்றுபவர்கள்

சனி, 26 பிப்ரவரி, 2011

மாலை வேளை ரதி மாறன் பூஜை..அடி மானே இதழ் இதோ

நண்பர்கள் பலர் தெரிந்துக் கொள்ள விரும்புவது இந்த பாடல்களை நான் எங்கிருந்து தரம் இறக்குகிறேன் என்பது. பெரும்பாலான பாடல்களை நான் எனது சிறு வயதிலிருந்து பாதுகாத்து வருகிறேன். அதிலும் பல பாடல்களை இழந்துவிட்டேன் (அப்போது அதன் அருமை தெரியவில்லை) தற்போது சுக்ரவதனீ என்னும் இழையின் நண்பர்கள், கூல் டொட் எனும் இழைகளின் உதவியுடனும் உலகின் பல பகுதிகளில் இருக்கும் எனது நண்பர்கள் மூலமும் பாடல்களை கேட்டு பெறுகிறேன். என்னிடம் இருக்கும் அத்தனை பாடல்களையும் இவ்வாறு இறக்கி முடிக்க பல காலம் ஆகலாம். ஆகையால், இனிமையான, மனதிற்க்கு சுகமெனத் தோன்றும் பாடல்களை மட்டும் இப்பொழுது ஆரம்பித்திருக்கிறேன். நண்பர்களுக்கு ஏதும் மாற்றம் தேவை என்றால் தெரிவிக்கலாம். ஆரம்பத்தில் நான் பாடலை கேட்கும் படி மட்டும் தான் பதிவினை ஆரம்பித்தேன். ஆனால் பல நண்பர்கள் பாடலை தரம் இறக்கும் வசதியுடன் கேட்டதால். அந்த வசதியையும் அளித்தேன். என்னை பொறுத்தவரை இந்த இனிமையான பாடல்கள் எங்காவது ஓரிடத்தில் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது. அபூர்வமான பாடல்களை தேடி பிடிக்கும் போதுதான் அதன் கஷ்டம் தெரிய வருகிறது.

தொடர்ந்து உயர்வான கருத்துக்களைவழங்கி வரும் அனைவருக்கும் எனது அன்பார்ந்த நன்றி. இனி ஒரு பாடல்...

மறைந்த திரு மலேஷியா வாசுதேவன் நினைவாக அவர் இயக்கி இசையமைத்த படத்திலிருந்து இனிமையான பாடல் ஒன்று இதோ. இது நடிகை ஷோபாவின் கடைசி படமும் கூட.

படம்: சாமந்தி பூ (1980)
பாடிய குரல்கள்: SPB, S P சைலஜா,
நடிப்பு: சிவகுமார், ஷோபாhttp://www.divshare.com/download/14167916-87fமாலை வேளை ரதி மாறன் பூஜை..
அடி மானே இதழ் இதோ தேவை நானா நானா..
மாலை வேளை ரதி மாறன் பூஜை..
அடி மானே இதழ் இதோ தேவை நானா நானா..

மாலை வேளை ரதி மாறன் பூஜை..
மாலை வேளை ரதி மாறன் பூஜை..
மணியோசை இதழ் தரும் நாதம்தானா..

மாலை வேளை ரதி மாறன் பூஜை..
அடி மானே இதழ் இதோ தேவை நானா நானா..
ல ல லல லால லா
ல ல லல லால லா
ரா ரா ரா ரா

தேனோடை.. இதில் ஏன் ஆடை.. வெறும் நூலாடை..இனி நான் ஆடை..
நூலாடை.. இது மேலாடை.. வரும் பூமேடை அதில் நீ ஆடை..
தேனோடை.. இதில் ஏன் ஆடை.. வெறும் நூலாடை..இனி நான் ஆடை..
நூலாடை.. இது மேலாடை.. வரும் பூமேடை அதில் நீ ஆடை..
தழுவிட வரவோ..

ல ல ல ல ல

தளிரதில் விடுமோ..
இருவர் இன்று ஒருவர் நாமென்று ஆவோமே..

மாலை வேளை ரதி மாறன் பூஜை..
அடி மானே இதழ் இதோ தேவை நானா நானா..

தாங்காது..என நான் தள்ள..எனை நீ அள்ள..சுகம் தானென்ன..

போதாது..என நான் சொல்ல..அடி நீ துள்ள வரும் நாளென்ன..

தாங்காது..என நான் தள்ள..எனை நீ அள்ள..சுகம் தானென்ன..

போதாது..என நான் சொல்ல..அடி நீ துள்ள வரும் நாளென்ன..

விரல்களின் நகங்கள்..ரகசிய இடங்கள்..
அழகின் கோலம் முழுதும் காணட்டும் இப்போது..
மாலை வேளை ரதி மாறன் பூஜை..
அடி மானே இதழ் இதோ தேவை நானா நானா..

2 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

உங்கள் பணி தொடரட்டும்.

Thiruchchelvam சொன்னது…

அருமையான பாடல்களை பகிருங்கள்

கருத்துரையிடுக