பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன்

திருமதி P சுசீலாவின் மற்றுமொரு இனிமையான பாடல்


திரைப் படம்: கண்ணா நலமா (1972)
இசை:M S விஸ்வனாதன்
இயக்கம்: K பாலசந்தர்
நடிப்பு: ஜெமினி, ஜெயந்தி
http://www.divshare.com/download/13999352-905


ஆரி ஆரி ஆரி ஆரி ஆரிரோ...
ஆரி ஆரி ஆரி ஆரி ஆரிரோ..
நான் கேட்டேன் அவன் தந்தான்
தாலாட்டும் தாயானேன்

நான் கேட்டேன் அவன் தந்தான்
தாலாட்டும் தாயானேன்

நாள் பார்த்து ஊர் சேர்த்து
பேர் சூட்டும் தாயானேன்
அவன் இன்றி இவன் எங்கே
என் நன்றி தலைவனுகே

நான் கேட்டேன் அவன் தந்தான்
தாலாட்டும் தாயானேன்

மானின் நிழல் மேனியும்
மஞ்சள் வெயில் சாயலும்
கோவில் போல தோற்றமும்
கொண்டான் எங்கள் கண்ணனே
கொண்டான் எங்கள் கண்ணனே
ஆடாயோ....
ஆடாயோ கண்ணா நீ என் நெஞ்சில் பொன்னூஞ்சல்
தேடாயோ மன்னா நீ என் நெஞ்சில் பூமஞ்சம்

நான் கேட்டேன் அவன் தந்தான்
தாலாட்டும் தாயானேன்

ஆயர் குலக் கண்ணனால்
அன்னை பெறும் சோதனை
எங்கள் இன்பக் கள்ளனால்
நானும் கண்ட சாதனை
நானும் கண்ட சாதனை
கொண்டாடு..
கொண்டாடு அன்னை நான் நின்றாடும் செல்வம் நீ
வண்டாடும் பூந்தென்றல் என்றாகும் என் இல்லம்

நான் கேட்டேன் அவன் தந்தான்
தாலாட்டும் தாயானேன்


1 கருத்து:

அப்பாதுரை சொன்னது…

இனிமையான பாடல். மறந்தே போன பாடலை எடுத்துக் கொடுத்தீர்கள், நன்றி.

கருத்துரையிடுக