பின்பற்றுபவர்கள்

திங்கள், 14 பிப்ரவரி, 2011

பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ

இன்றொரு நல்ல பாடல். நண்பர்களுக்கு பிடித்த பாடலாக இருக்கும் என் நம்புகிறேன்.


திரைப் படம்: ரத்தப் பாசம் (1980)

நடிப்பு: சிவாஜி, ஸ்ரீபிரியா

இசை: M S விஸ்வனாதன்

பாடல்: கண்ணதாஸன்

இயக்கம்: K விஜயன்
http://www.divshare.com/download/14052864-54e


ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா
ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா

பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ

பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ

மஞ்சள் வானிலே வந்த பௌர்ணமி
உயர் காமன் மந்திரம் நீ

மஞ்சள் வானிலே வந்த பௌர்ணமி
உயர் காமன் மந்திரம் நீ

சங்க தேரிலே வந்த செந்தமிழ்
தரும் மோக நாடகம் நீ

சங்க தேரிலே வந்த செந்தமிழ்
தரும் மோக நாடகம் நீ

பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ

ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா
ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா

வண்ண சேலையில் தஞ்சை கோபுரம்
மெல்ல ஆடி அசைகின்றதோ

வண்ண சேலையில் தஞ்சை கோபுரம்
மெல்ல ஆடி அசைகின்றதோ

அந்த கோவிலில் ரெண்டு தீபங்கள்
கண்ணில் ஜோதி தருகின்றதோ

பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ

மங்கை மோகனம் தந்த ஞாபகம்
ஒரு ராகம் பாடுதம்மா
இந்த தாகமும் அந்த பாடலும்
ஒன்று போல தோன்றுதம்மா

பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக