பின்பற்றுபவர்கள்

திங்கள், 27 ஜூன், 2011

மழையே என் மீது தூவாதே..நனைந்தால் என் பெண்மை தாங்காதே..

ஸ்ரீப்ரியாவின் சொந்த தயாரிப்பு. வாணி ஜெயராம் ரொம்ப இனிமையாக குரல் கொடுத்திருக்கிறார். தீபன் சக்கரவர்த்தி அழகாக இணைந்து பாடி இருக்கிறார். மொத்தத்தில் ஒரு நல்ல இசையுடன் கூடிய பாடல்.



திரைப் படம்: சாந்தி முகூர்த்தம் (1984)

குரல்கள்: தீபன் சக்ரவர்த்தி, வாணி ஜெயராம்

இசை: சங்கர் கணேஷ்

இயக்கம்: A R சுப்ரமணியம்

நடிப்பு: மோகன், ஸ்ரீப்ரியா



http://www.divshare.com/download/15174070-975

மழையே என் மீது தூவாதே

நனைந்தால் என் பெண்மை தாங்காதே

ஹே ஹே ஹே ஹே ஹே ஹோ ஹோ ஹோ ஹோ

மழையே என் மீது தூவாதே

நனைந்தால் என் பெண்மை தாங்காதே

போர்த்திக்கொள்ள போர்வை இல்லை

நாணம் இன்று தாண்டும் எல்லை

இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை



மழையே பெண் மீது தூவாதே

நனைந்தால் என் கண்கள் தாங்காதே

ஹே ஹே ஹே ஹே ஹே ஹோ ஹோ ஹோ ஹோ

மழையே பெண் மீது தூவாதே

நனைந்தால் என் கண்கள் தாங்காதே

போர்த்திக்கொள்ள போர்வை இல்லை

நாணம் இன்று தாண்டும் எல்லை

இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை

மழையே என் மீது தூவாதே

நனைந்தால் என் பெண்மை தாங்காதே



தேவதை ஒன்று என் நெஞ்சை தீண்டியதென்று

என் கண்கள் தூங்காமல் என்னோடு போராடாதோ

நீ தொடும் வேளை என் பேரே ஞாபகம் இல்லை

உன் மார்பில் என் பெண்மை வேரோடுதான் வீழாதோ

செந்தூர கலசம் தெய்வீக ஸ்பரிசம்

சந்தோஷ சரசம் இதழ் ரசம் இலவசம்



மழையே என் மீது தூவாதே

நனைந்தால் என் பெண்மை தாங்காதே

போர்த்திக்கொள்ள போர்வை இல்லை

நாணம் இன்று தாண்டும் எல்லை

இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை

மழையே என் மீது தூவாதே

நனைந்தால் என் பெண்மை தாங்காதே



மார்கழி மாதம் என்னோடு நீ இரு போதும்

உன் பார்வை தீ மூட்டும் என் தேகம் குளிர் காயவே

என்னடி சொல்ல உன் வார்த்தை உண்மையும் அல்ல

வா பெண்ணே உன் சூட்டில் தீ இன்று குளிர் காய்ந்ததோ

உன்னோடு நெருக்கம் என்றாலும் தயக்கம்

கண்ணோரம் தெரிக்கும் நிலவரம் கலவரம்



மழையே பெண் மீது நீ தூவு

இனியும் பெண் நெஞ்சு தாங்காது

மழையே என் மீது நீ தூவு

இனியும் என் பெண்மை தாங்காது



அக்கம் பக்கம் யாரும் இல்லை

நாணம் கொள்ள நேரம் இல்லை

மனதை இனியும் மறைப்பது தொல்லை



ல ல ல லல ல ல ல ல ல ல லல ல ல ல ல ல

1 கருத்து:

பனித்துளி சங்கர் சொன்னது…

இதுவரை நான் கேட்காதப் பாடல் இன்றுதான் முதல் முறையாக உங்களின் பதிவின் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது பகிர்ந்தமைக்கு நன்றி

கருத்துரையிடுக