பின்பற்றுபவர்கள்

திங்கள், 22 ஜூலை, 2013

நல்ல இடம் நீ வந்த இடம்

ஒரு காதலைச் சொல்ல  இவ்வளவு இலக்கணத் தமிழ் தேவையா எனதான் தோன்றுகிறது. ஆனால் தமிழ் தேவை இங்கு இனிமையான இசையோடு கூடி வருவதால் மேலும் இனிமை சேர்க்கிறது. அனுபவிப்போம்.
பாடலை எழுதியவர் கண்ணதாசன் என நினைத்திருந்தேன். வாலியும் அவருக்கு இளைத்தவரில்லைதான்.
பாடிய குரல்களும் அருமை.

திரைப்படம்: கலாட்டா கல்யாணம் (1968)
நடிப்பு: சிவாஜி கணேசன், ஜெயலலிதா
பாடகர்கள்: டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்: வாலி
இயக்குநர்: சி.வி.ராஜேந்திரன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2NjI0MF8yZmczVF9mNGZh/Nalla%20idam%20nee%20vantha%20idam.MP3


நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி

நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி

எங்கே உன் ஜாடை விழும்
அங்கே என் ஆசை வரும்
அன்பே உன் பேர் எழுதும்
கண் பார்வை நாள் முழுதும்

நல்ல இடம் நான் வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண புது ரோஜா


நித்திரை ஓடிட முத்திரை வாங்கிட
பத்தரை மாற்றுத் தங்கம்
குங்குமம் நெஞ்சினில் சங்கமமாகிட
பொங்கிடும் வெள்ளம் எங்கும்

மல்லிகைப் பூவிலும் மெல்லியதாகிய
செவ்வண்ணக் கால்கள் பின்ன
நித்தமும் ஆடிட இத்தனை நாடக
ஒத்திகை பார்ப்பதென்ன

தழுவாதோ கைகள் தானாக

உன்னால் கனிந்தேன் கனியாக

நல்ல இடம் நீ வந்த இடம்

வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்

பெற வேண்டும் வண்ண புது ரோஜா

லலல லலலா... லா... லலல லலலலா... லா...

ஆஹஹாஹ ஹாஹஹஹா...
ஆஹஹாஹ ஹாஹஹஹா...

கட்டழகானது ஒட்டுறவாடிட
எண்ணங்கள் தேடிப் போகும்
சித்திரப் பூமகள் முத்தமளந்திட
எத்தனைக் காலம் ஆகும்

முத்து மொழிக் கிளி கொத்து மலர்க் கொடி
தித்தித்த வார்த்தை சொல்வாள்
வட்ட நிலா ஒளி பட்ட இடத்தினில்
சந்திக்க வேண்டும் என்பாள்

இதமான இன்பம் சேராதோ

இன்றே இதயம் குளிராதோ

நல்ல இடம் நீ வந்த இடம்

வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்

பெற வேண்டும் வண்ண புது ரோஜா

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள்... பாடல் வரிகளுக்கு நன்றி...

NAGARAJAN சொன்னது…

ஜெயலலிதா சிவாஜியுடன் ஜோடியாக நடித்த முதல் படம் (இதற்கு முன், மோட்டார் சுந்தரம் பிள்ளை என்ற படத்தில், சிவாஜிக்கு மகளாக நடித்திருப்பார்).

எனவே வாலி நல்ல இடம் நீ வந்த இடம் என்று எழுதினர்

Unknown சொன்னது…

பாடல் காட்சி தரமேற்ற மறந்துவிட்டேன். விரைவில் எதிர்ப்பாருங்கள். விபரங்களுக்கு நன்றிகள் பல நாகராஜன் சார்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள ஊர்க்குருவி படக் காட்சியும் விரைவில் முயற்சிக்கிறேன்.
தனபால் ஸாரின் உடனடி தடாலடி கருத்துகளுக்கும் நன்றிகள்.

கருத்துரையிடுக