பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 5 ஜூலை, 2011

காதல் சிறகை காற்றினில் விரித்து

நீண்ட காலம் பிரிந்திருந்த கணவனை சந்திக்க இருக்கும் பெண்மணியின் உள்ளக் கருத்துக்களை அப்படியே வார்த்திருக்கிறார் பாடலாசிரியர். இசையமைப்பும் பாடிய விதமும் கன கச்சிதமாக இருக்கிறது.


திரைப் படம்: பாலும் பழமும் (1961)
நடிப்பு: சிவாஜி, சரோஜா தேவி
இயக்கம்: A பீம்சிங்
பாடல்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
குரல்: P சுசீலா



http://www.divshare.com/download/15154628-c49



தாவி வரும் மேகமே என் தாய் நாடு செல்வாயா

ஊர் உலகம் போற்ற வரும் என் உத்தமனைக் காண்பாயோ

இன்று மணம் முடித்த ஏந்திழைப் போல் நான் இங்கே

சொந்தம் கொண்டாடுவதை சொல்லி விட மாட்டாயோ


காதல் சிறகை காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில் குளிக்கவா

கண்ணீர் கடலில் குளிக்கவா

எண்ணங்களாலே பாலம் அமைத்து

இரவும் பகலும் நடக்கவா

இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி

இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி

இரு கை கொண்டு வணங்கவா

இரு கை கொண்டு வணங்கவா

காதல் சிறகை காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில் குளிக்கவா

கண்ணீர் கடலில் குளிக்கவா

முதல் நாள் காணும் புதுமணப் பெண் போல்

முகத்தை மறைத்தல் வேண்டுமா

முறையுடன் நடந்த கணவர் முன்னாலே

முறையுடன் நடந்த கணவர் முன்னாலே

பரம்பரை நானம் தோன்றுமா

பரம்பரை நானம் தோன்றுமா

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது

அழுதால் கொஞ்சம் நிம்மதி

பேச மறந்து சிலையாய் இருந்தால்

பேச மறந்து சிலையாய் இருந்தால்

அதுதான் தெய்வத்தின் சன்னதி

அதுதான் காதல் சன்னதி

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

காதல் சிறகை காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில் குளிக்கவா

கண்ணீர் கடலில் குளிக்கவா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ



3 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகிய பாடல் ...

பெயரில்லா சொன்னது…

பாடல் பாடும்போது குரலில் ஓடும் சுசிலாவின் ஓட்டப்பந்தயம் அருமை

பெயரில்லா சொன்னது…

nalla padal. rasithen

கருத்துரையிடுக