பின்பற்றுபவர்கள்

வியாழன், 7 ஜூலை, 2011

யார் தூரிகை தந்த ஓவியம் யார் சிந்தனை செய்த காவியம்

அழகான இந்தப் பாடல், படம் பேசப் படாததால் அரிய பாடலாகிப் போனது. வழக்கமான SPBயும் சற்று வித்தியாசமாக உமா ரமணனும் இனிமை சேர்த்திருக்கிறார்கள்.


திரைப் படம்: பாரு பாரு பட்டணம் பாரு (1986)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: உமா ரமணன், SPB
நடிப்பு: மோகன், ரஞ்சனி
இயக்கம்: மனோபாலா
பாடலாசிரியர்: கங்கை அமரன்



http://www.divshare.com/download/14237104-d77





ஹா ஹா ஹாஹா ஹா.. ந ந ந ந ந நா ந ந ந ந ந

யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே ஹாஹா

யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே ஹா ஹா ஹா

கடலலைகளின் தாளம் பல ஜதிகளும் தோன்றும்
நினைவினில் ஒரு ராகம் நிதம் பல வித பாவம்
ஆடும் கடல் காற்றும் அங்கு வரும் பாட்டும்
ஓராயிரம் பாவமேற்றுதே
நிதமும் தேடுதே ராகம் பாடுதே
மனதினிலே கனவுகளே வருகிறதே
தினம் தினம்

யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்

சிறு மலர்களின் வாசம் பல கவிதைகள் பேசும்
சில மனங்களின் பாவம் பல நினைவினில் வாழும்

அலை என ஓடும் ஆசை வந்து கூடும்
உன் பாணமோ பூவை சூடுதே
பல நூறாசைகள் உள்ளிலே ஊறுதே
இளமனதில் புது உறவு தெரிகிறதே
தினம் தினம்

யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே ஹா ஹா ஹா
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்

1 கருத்து:

தமிழ் உதயம் சொன்னது…

மோகனின் பல ஹிட் பாடல்களை விட அற்புதமான பாடல். கேட்க கேட்க சலிக்காத பாடல்.

கருத்துரையிடுக