பின்பற்றுபவர்கள்

திங்கள், 11 ஜூலை, 2011

மங்கை ஒரு திங்கள் கலை மலர்ந்த மணிக் கண்கள்

கவிதை வடிவில் ஒரு திரைப் படப் பாடல். மிகச் சில இசைக் கருவிகளை மட்டும் பயன்படுத்தி இசையமைத்திருக்கிறார் M S விஸ்வனாதன். சுதந்திரமாக பாடுவதற்க்கு S P B க்கு வாய்ப்பு கொடுத்தது போல தெரிகிறது.  வெளிவராத படத்திலிருந்து ஒரு அரிய பாடல்


திரைப் படம்: முன் ஒரு காலத்தில்
பாடல்: வாலி???



http://www.divshare.com/download/15278662-9b9

மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக் கண்கள்
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக் கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள்
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக் கண்கள்

துள்ளும் கலை மான்கள்
தேன் சிந்தும் இளம் பூக்கள்
துள்ளும் கலை மான்கள்
தேன் சிந்தும் இளம் பூக்கள்

பாவை முகக்கலைகள்
தமிழ் கோவில் கொண்ட சிலைகள்
வங்கக்கடல் அலைகள்
பனி வழங்கும் வண்ண மலைகள்
பொங்கும் நதி நிலைகள்
அந்தப் பூவை நகை வளைகள்
மங்கை ஒரு திங்கள்

ஆ ஹா ஹா
போதை மொழி பனங்கள்
ஆ ஆ ஆ
போதை மொழி பனங்கள்
அந்தப் புறாக்கள் அவள் இனங்கள்
போதை மொழி பனங்கள்
அந்தப் புறாக்கள் அவள் இனங்கள்
ஆசை மிகும் குணங்கள்
அவள் ஜாடையில் பல விதங்கள்
கனிகள் தந்த இதழ்கள்
உயர் கவிகள் தந்த வரிகள்
கிளிகள் தந்த மொழிகள்
என்னை கிள்ளும் அவள் தடைகள்
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக் கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள்
மங்கை ஒரு திங்கள்

தோட்டம் கொண்ட குயில்கள்
நடை ஆட்டம் கண்ட மயில்கள்
தோட்டம் கொண்ட குயில்கள்
நடை ஆட்டம் கண்ட மயில்கள்

காட்டும் அவள் அசைகள்
அவள் கால கோயில் மணிகள்
தெய்வம் வைத்த கடைகள்
அவள் தேகம் சொல்லும் விலைகள்
நெஞ்சில் இல்லை தடைகள்
அவள் கண்ணில் ரெண்டு கதைகள்
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக் கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள்
மங்கை ஒரு திங்கள்

2 கருத்துகள்:

sathes சொன்னது…

S.P.சைலஜா பாடிய "என் காதல் வாழ்க்கைலே" என்ற பாடலை தர முடியுமா? பட பெயர் தெரியவில்லை .

sathes சொன்னது…

S.P.சைலஜா பாடிய "என் காதல் வாழ்க்கைலே" என்ற பாடலை தர முடியுமா? பட பெயர் தெரியவில்லை .

கருத்துரையிடுக