எளிதான, சாதாரணமான கவிதை வரிகளைப் போட்டு பிரமாதமான காதல் பாடல் ஒன்றை வழங்கி இருக்கிறார்கள். இனிமையான பாடல்.
திரைப் படம்: வீராங்கனை (1964)
பாடியவர்கள்: K J யேசுதாஸ், P சுசீலா
இசை: S M சுப்பையா நாயுடு
இயக்கம்: A S A சாமி
நடிப்பு: பத்மினிநீல வண்ணக் கண்களிரண்டு
நீல வண்ணக் கண்களிரண்டுசிரிக்கும் முல்லை இதழ்களிரண்டு
தெறித்து மின்னல் போலே வந்து மயக்குவதேனோ?என்னை மயக்குவதேனோ?
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆசைக் கனவில் ஏறிப் பறந்து
அமுத நினைவில் ஒன்றிக் கலந்து
ஆனந்த கீதம் பாடிடும் வண்டு
அணைக்க மறந்ததேன்?
பூவை அணைக்க மறந்ததேன்?
உன் கைகள் அணைப்பிலே கனிவு தெரிந்தது
காதலின் வாசல் அன்றே திறந்தது
என் போல் ஒருவன் நினைத்தென்ன செய்வது?
இருண்ட என் வாழ்வுக்கு ஒளி யார் தருவது?
இருண்ட என் வாழ்வுக்கு ஒளி யார் தருவது?
கண் பார்த்து மகிழ்வதெல்லாம்
கனவாகிப் போவதுண்டு
கண் பார்த்து மகிழ்வதெல்லாம்
கனவாகிப் போவதுண்டு
காதல் சேர்த்து வைப்பதற்கு
காரணம் யார் சொல்வதுண்டு?
உணர்வோடு கலந்து விட்ட உயிரே உன் வாழ்வின்
ஒளியாக நானிருப்பேன்
சுடராக நீயிருப்பாய்
ஒளியாக நானிருப்பேன்
சுடராக நீயிருப்பாய்
நீல வண்ணக் கண்களிரண்டு
சிரிக்கும் முல்லை இதழ்களிரண்டு
தெறித்து மின்னல் போலே வந்து மயக்குவதேனோ?
என்னை மயக்குவதேனோ?
3 கருத்துகள்:
ஜேசுதாசின் ஆரம்பகால பாடலை தந்தற்கு மிக்க நன்றி !
வாழ்த்துக்கள்.
தாஸ்
24.07.2011
மிகவும் பிடித்த பாடல்!மீண்டும் ஒரு
அருமையான பாடலை கேட்டது மகிழ்ச்சி நன்றி.
இந்தப் பாடலின் காணொளி கிடைக்காதா? நானும் நீண்ட காலமாக தேடுகிறேன். கிடைத்தால் தயவு செய்து அனுப்புங்கள் யாராவது__பாண்டியன், பத்திரிகையாளர், கொழும்பு
கருத்துரையிடுக