மற்றும் ஒரு இனிமையானப் பாடல். ஆண்களையே பிடிக்காத பெண்ணிடம் காதலைச் சொல்லும் காதலனும் அதை மறுத்து சொல்லும் காதலியும். பாடலை மென்மையாக கையாண்டிருக்கிறார்கள். அழகான அருவிப் போன்ற பாடல் நடை.
திரைப் படம்: முல்லை வனம் (1955)
இயக்கம்: கிருஷ்ணன்
குரல்கள்:டி எம் எஸ், ராதா ஜெயலக்ஷ்மி
இசை: தெரியவில்லை
நடிப்பு: விஜய குமாரி, வீரப்பா, ஸ்ரீராம், குமாரி ருக்மணி (நடிகை லக்ஷ்மியின் தாயாரோ?)
http://www.divshare.com/download/16297865-1f5
எங்கிருந்தோ இங்கு வந்த ரதியே
என் உள்ளம் தனையே நீ கொள்ளை கொண்டதேன்
எங்கிருந்தோ இங்கு வந்த ரதியே
என் உள்ளம் தனையே நீ கொள்ளை கொண்டதேன்
கள்ள எண்ணமே கொண்டு என்னிடத்திலே
நீ நல்லவனை போல் பேச எண்ணுவது வீண்
கள்ள எண்ணமே கொண்டு என்னிடத்திலே
நீ நல்லவனை போல் பேச எண்ணுவது வீண்
தேனும் பாலும் சேர்ந்தது போலே
நானும் நீயும் ஒன்றாகினோம்
நானம் ஏனோ என்னாசை மானே
நாமே காண்போம் பேரின்பமே
எங்கிருந்தோ இங்கு வந்த ரதியே
என் உள்ளம் தனையே நீ கொள்ளை கொண்டதேன்
ஆண்களின் உறவை வெறுப்பவள் நானே
அதனால் என்னிடம் நீயே
வீண் ஆசையே கொண்டு பேசுதல் தீதே
ஆகாது சரசம் சரியல்லவே
வீண் ஆசையே கொண்டு பேசுதல் தீதே
ஆகாது சரசம் சரியல்லவே
கள்ள எண்ணமே கொண்டு என்னிடத்திலே
நீ நல்லவனை போல் பேச எண்ணுவது வீண்
ஆண்களின் துணையே இல்லாது பெண்கள்
சுகம் காண முடியுமா
என்றும் சுகமே எண்ணி வாழ்தல்
சரியல்ல தெரியுமா
இன்பத்தை வெறுத்தே பேசுதல் முறையோ
எழில் மேவும் சுந்தரி
வம்புத் தனமே செய்தல் தகுமோ
சொல் நீயும் சுந்தரா
ஆண்டவன் ஆண் பெண்ணை படைத்தது ஏனோ
அறிவொடு உலகில் வாழ்வதற்கே
ஆண்டவன் ஆண் பெண்ணை படைத்தது ஏனோ
அறிவொடு உலகில் வாழ்வதற்கே
எங்கிருந்தோ இங்கு வந்த ரதியே
என் உள்ளம் கவர்ந்தே நீ செல்லலாமா
எங்கிருந்தோ இங்கு வந்த ரதியே
என் உள்ளம் கவர்ந்தே நீ செல்லலாமா
3 கருத்துகள்:
எனக்குப் பிடித்த பாடல். நன்றி Sir.
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"
பலரும் அறிந்திராத வயலின் மேதை நரசிம்மனின் அருமையான பாடல்,
அழகு ! நன்றிகள் பல !
கருத்துரையிடுக