பின்பற்றுபவர்கள்

வியாழன், 8 டிசம்பர், 2011

வெண்பளிங்கு மேடை கட்டி வண்டிரண்டை ஆடவிட்டு கண்கள் என்று சொல்லலாகுமோ அன்பே


கணீர் குரலோன் குரலில் நல்லத் தமிழிலில் அருமையானப் பாடல்.

திரைப் படம்: பூஜைக்கு வந்த மலர் (1965)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: வாலி
குரல்கள்:L R  ஈஸ்வரி ,சீர்காழி S கோவிந்தராஜன்
நடிப்பு: ஜெமினி கணேசன், சாவித்திரி, தேவிகா
இயக்கம்: முக்தா V  ஸ்ரீனிவாசன்



http://www.divshare.com/download/16049930-594









வெண்பளிங்கு மேடை கட்டி
வண்டிரண்டை ஆடவிட்டு
கண்கள் என்று சொல்லலாகுமோ அன்பே
சன்னதியில் வரலாகுமோ
வெண்பளிங்கு மேடை கட்டி
வண்டிரண்டை ஆடவிட்டு
கண்கள் என்று சொல்லலாகுமோ அன்பே
சன்னதியில் வரலாகுமோ

தென்பாங்கு ராகம் தொட்டு
செந்தமிழில் பாட்டெடுத்து
தென்பாங்கு ராகம் தொட்டு
செந்தமிழில் பாட்டெடுத்து
கன்னி என்னை வெல்லலாகுமோ அன்பே
சன்னதியில் வரலாகுமோ
தென்பாங்கு ராகம் தொட்டு
செந்தமிழில் பாட்டெடுத்து
கன்னி என்னை வெல்லலாகுமோ அன்பே
சன்னதியில் வரலாகுமோ

மின்னல் வரும் மேகத்திலே
உன் கூந்தல் போனதென்று
மின்னல் வரும் மேகத்திலே
உன் கூந்தல் போனதென்று
மெல்லிடையை தூதுவிட்டு
தள்ளாடி வந்தாயோ

தங்கரதம் ஏறிவந்து
மங்கை முகம் பார்த்தவரே
பொங்கி வரும் ஆசையிலே
பங்கு பெறக் கூடாதோ

தென்பாங்கு ராகம் தொட்டு
செந்தமிழில் பாட்டெடுத்து
கன்னி என்னை வெல்லலாகுமோ அன்பே
சன்னதியில் வரலாகுமோ

அன்புக்கனி சார் எடுத்து
அந்தி வெய்யில் சூடேற்றி
அன்புக்கனி சார் எடுத்து
அந்தி வெய்யில் சூடேற்றி
இன்பம் என்று நீ கொடுத்தால்
என் மயக்கம் தீராதோ

உள்ளம் என்ற ஊஞ்சலிலே
பள்ளி கொண்ட ஆருயிரே
உள்ளம் என்ற ஊஞ்சலிலே
பள்ளி கொண்ட ஆருயிரே
மெல்ல மெல்ல நான் தொடவா
அல்லி மலர் தேன் தரவா

வெண்பளிங்கு மேடை கட்டி
வண்டிரண்டை ஆடவிட்டு
கண்கள் என்று சொல்லலாகுமோ அன்பே
சன்னதியில் வரலாகுமோ

2 கருத்துகள்:

அப்பாதுரை சொன்னது…

ரொம்ப நாளாச்சுங்க இந்தப் பாட்டைக் கேட்டு.. நன்றி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பாட்டை படிக்கவும், கேட்கவும் வைத்தமைக்கு நன்றி!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

கருத்துரையிடுக