பின்பற்றுபவர்கள்

புதன், 14 டிசம்பர், 2011

ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கல நாளினிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே


அழகானப் பாடல் ஆனால் காணொளியில் பார்க்கும் போது நடிகர் சுரேஷுக்கு மலேஷிய வாசுதேவன் குரல் பொருந்தாதது போல தோன்றுகிறது. அவர் கொஞ்சம் மென்மையாகப் பாடியிருக்கலாம்

திரைப் படம் : ஆகாய தாமரைகள் (1985)
குரல்கள் : மலேஷியா வாசுதேவன், S P சைலஜா
இசை : இளையராஜா
நடிப்பு: சுரேஷ், ரேவதி
இயக்கம்: V அழகப்பன்






http://www.divshare.com/download/16049819-ad2




http://www.divshare.com/download/16049169-ce0

ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்
மங்கல நாளினிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே
ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்
மங்கல நாளினிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே

நீர் அருவிகள் ஓர் நதியென ஏன் நடக்கிறது
மாங்கடலென்னும் தன் துணைவனைத் தான் கலந்திடவே
செந்தாழம்பூ கார்க்காலம் வந்ததும்
கூத்தாடுதே யாரை கண்டு
மின்னல் என்னும் தன் காதல் நாயகன்
வானத்திலே மின்னக்கண்டு
அதில் கதை கோடி உண்டு
ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்
மங்கல நாளினிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே

நீ மலர்ந்ததும் நான் வளர்ந்ததும்
நாம் இணைந்திடவே
உன் உறவினில் என் மனதினில் தேன் பெருகிடுதே
என் நெஞ்சிலே ராகங்கள் ஆயிரம்
உன் கண்களே சொல்கின்றதே
உன் கூந்தலில் பூச்சூடும் பூவிது
உன் மார்பிலே சாய்கின்றதே
மனம் சதிராடும் காலம்
ஆனந்த வெள்ளத்திலே ஆனந்த வெள்ளத்திலே

தேன் சுவைதனை பூ மணம்தனை யார் பிரித்திடுவார்
யார் பிரிப்பினும் வெண் நிலவினை வான் பிரிந்திடுமோ
ஒன்றில் ஒன்றாய் உண்டான சொந்தங்கள்
என்னாளுமே மாறாதைய்யா
நெஞ்சுகுள்ளே உண்டாகும் பந்தங்கள்
என்னாளுமே நீங்காதம்மா
கண்ணா அதுதானே காதல்

ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்
மங்கல நாளினிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே
ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்
மங்கல நாளினிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே

2 கருத்துகள்:

rishvan சொன்னது…

நன்று... நலலா தொகுத்து இருக்கிங்க்... நன்றி..
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பகிர்விற்கு நன்றி Sir!

கருத்துரையிடுக