பின்பற்றுபவர்கள்

வியாழன், 8 டிசம்பர், 2011

உன்னை படைத்ததும் பிரம்மன் ஒரு கனம் திகைத்து நின்று இருப்பான்


திரு பா. கணேஷ் அவர்களின் நீண்ட நாள் ஆசையான இந்தப் பாடல் எனக்கு இன்றுதான் கிடைத்தது. திரு கோவை ரவி அவர்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைபட்டிருக்கிறேன். அவருடைய ஒரு பதிவிலிருந்து இந்தப் பாடல் கையாளபட்டது. அழகான கவித்துவமான மென்மை பாடல்.


திரைப் படம்: நீ சிரித்தால் நான் சிரிப்பேன் (1979)
இசை: ஷியாம்
குரல்: S P B
நடிப்பு: சிவசந்திரன், சுமித்ரா
இயக்கம்: மல்லியம் ராஜகோபால்




Upload Music - Upload Audio -






உன்னை படைத்ததும்  பிரம்மன் 
ஒரு கனம் திகைத்து நின்று இருப்பான்

உன்னை படைத்ததும்  பிரம்மன் 
ஒரு கனம் திகைத்து நின்று இருப்பான்
தங்கச்சிலை உந்தன் சிந்தும் அழகினில்
தன்னை மறந்திருப்பான் 
உன்னை படைத்ததும்  பிரம்மன் 
ஒரு கனம் திகைத்து நின்று இருப்பான்
தங்கச்சிலை உந்தன் சிந்தும் அழகினில்
தன்னை மறந்திருப்பான் 

பாதி முகத்தை மறைக்கும் உந்தன்
கூந்தலின் கறுமை கண்டு
வானில் மிதக்கும் மேகக்கூட்டம்
மறையும் நானம் கொண்டு
ஆ ஆ ஆ ஆ
வானில் மிதக்கும் மேகக்கூட்டம்
மறையும் நானம் கொண்டு 
செவ்விதழ் ஓரம் பட்டொளி வீசும்
மோகன புன்னகை கண்டு
மலரும் தாமரை தயங்கி நின்றிடும்
சிரிப்பில் போதை கொண்டு

உன்னை படைத்ததும்  பிரம்மன் 
ஒரு கனம் திகைத்து நின்று இருப்பான்
தங்கச்சிலை உந்தன் சிந்தும் அழகினில்
தன்னை மறந்திருப்பான் 

கண்ணின் அழகை ஓவியம் எழுது
வண்ணக் கலவை ஏது
அன்ன நடையை கவிஞன் புகழ
வார்த்தைகள் கிடையாது
ஆ ஆ ஆ ஆ
அன்ன நடையை கவிஞன் புகழ
வார்த்தைகள் கிடையாது

ஆசை துடிக்க நானம் நடக்க
வாய்த் திறப்பது ஏது
மௌன விழிகள் கூறும் கதையை
தடுத்திட முடியாது

உன்னை படைத்ததும்  பிரம்மன் 
ஒரு கனம் திகைத்து நின்று இருப்பான்
தங்கச்சிலை உந்தன் சிந்தும் அழகினில்
தன்னை மறந்திருப்பான் 
தன்னை மறந்திருப்பான் 

3 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

ஆஹா... சிறு வயதில் கேட்டு, மனதில் பதிந்த பாடல். அதன்பின் வானொலியிலும், டி.வி.யிலும் எங்கும் நான் கேட்டதில்லை. பல ஆண்டுகளாக (யுகங்களாக!) வலைவீசித் தேடிவந்தேன் இப்பாடலை. எஸ்.பி.பி. அப்படியே உருகிப் பாடியிருப்பார் இப்பாடலை. எனக்காகத் தேடி பதிவிட்டமைக்கு மிகமிகமிக, இதயம் நிறைந்த நன்றிகள்!

பெயரில்லா சொன்னது…

வணக்கம் கனேஷ் சார்.. உங்கள் ரசிப்பு திறன் அபாரம் பாலுஜியின் குரல் அப்படிபட்டது. என் பா.நி.பா தளதத்தில் இருந்து பாடலை தொடர்பு கொடுத்தமைக்கு பதிவாளர் அவருக்கு மிக்க நன்றி. இதோ பாலுஜியின் பல அறிதான பாடல்கள் இந்த தளத்தில் நேரம் கிடைக்கு போது சென்று கேட்டு மகிழுங்கள் www.myspb.blogspot.com

பால கணேஷ் சொன்னது…

அட.. ஆமாம். அப்ப இதை ரசித்துக் கருத்திட்டு பாடலை டவுன்லோடியிருக்கேன். (பழைய போட்டோ என்னுது) நினைவில்லாமப் போச்சு. இப்ப திரும்ப எடுத்துக்கிட்டேன் அசோக். மிகமிக நன்றி உங்களுக்கும் கோவை ரவி அவர்களுக்கும்....

கருத்துரையிடுக