பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா

திருமதி P. சுசீலா இந்த மாதிரி பாடல்கள் அதிகமாக பாடியதில்லை. இது கிளப் டான்ஸ் எனப்படும் வகையை சேர்ந்தது, ஷங்கர் கணேஷ் பொதுவாக ஒரு செண்டிமெண்ட்டுக்காக சுசீலா அம்மாவை அவர்களின் படத்துக்கு முதல் பாடலை பாடச் செய்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி சில நேரங்களில் அந்த முதல் பாடல் இந்த வகையான பாடலாக அமைந்துவிடும். ஆனால் MSV இசையில் சுசீலா அம்மா இந்த மாதிரி பாடியதுதான் முதலாவதாக இருக்கும் என நினைக்கிறேன்.


திரைப்படம்: காசேதான் கடவுளடா (1972)
இயக்கம்: சித்திராலயா கோபு
தயாரிப்பு: AVM
நடிப்பு: முத்துராமன், லக்ஷ்மிhttp://www.divshare.com/download/13981567-cac


ஆ.. லலால்ல லா லா லா
ஆ.. லலால்ல லா லா லா
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
பட்டு மேனி பந்து போல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல
பட்டு மேனி பந்து போல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல

இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா

எங்கெங்கு தொட்டால் என்னென்ன இன்பம்
அங்கங்கு தொட வேண்டும் கை பதமாக
அங்கங்கள் முழுதும் சந்தங்கள் எழுதும்
ஆனந்தம் பெற வேண்டும் உன் பரிசாக

கையோடு பூவாட்டம் எடுத்து
என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து
கையோடு பூவாட்டம் எடுத்து
என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து
அஞ்சாறு சின்னங்கள் கொடுத்து
அந்த ஆரம்ப பாடத்தை நடத்து
அந்த ஆரம்ப பாடத்தை நடத்து

இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா


தட்டாமல் திறக்கும்
கேளாமல் கொடுக்கும்
என்னாளும் உனதல்லவோ
என் இள நெஞ்சம்
துயிலாமல் இருக்கும்
துணை தேடி தவிக்கும்
பெண் பாவை மனமல்லவோ
உன் மலர் மஞ்சம்

சொல்லாமல் கொள்ளாமல் பெறலாம்
இந்த சொர்கத்தை நீ தேடி வரலாம்
முன்னூறு முத்தாரம் இடலாம்
அதில் என் பங்கு சரி பாதி எனலாம்
அதில் என் பங்கு சரி பாதி எனலாம்

1 கருத்து:

Unknown சொன்னது…

எளிமை, இனிமை. பாடலின் கருத்து என்னவோ ஆணை மயக்கும் ஒரு ஏமாற்றுக்காரிக்கானதாக இருந்தாலும், ஒரு பெண்ணின் மனதின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக கவி எழுதி இருப்பார்.

கருத்துரையிடுக