பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 14 டிசம்பர், 2010

உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது

நல்ல இசையும் P. சுசீலா மற்றும் ஜெயசந்திரனின் இனிமையான குரல்களும்


படம்:  தங்க ரங்கன்  (1978)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: விஜயகுமார், ஸ்ரீவித்யா
இயக்கம்: S R தக்ஷினாமூர்த்தி
தயாரிப்பு: ஜேப்பியார்Embed Music Files - Play Audio -


உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது

அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது

உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது

அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது

கனவுகளில் உன்னைக்கண்டு வெட்கம் வந்தது

அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிக்கொண்டது

கனவுகளில் உன்னைக்கண்டு வெட்கம் வந்தது

அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிக்கொண்டது

முந்தானை சிந்தாட வந்தாடும் நேரத்தில்

உன் தோளில் கண்மூட வேண்டும்

ஆஹா...உன் தோளில் கண்மூட வேண்டும்

கண்மூடும் நேரத்தில் பொன்பூவின் தேகத்தில்

தள்ளாடும் வண்டாக வேண்டும்

ஆஹா...தள்ளாடும் வண்டாக வேண்டும்

செவ்வானம் தேன் சிந்தும் உல்லாச பாடங்கள்

இதழோரம் கற்றாக வேண்டும்

ஆஹா...இதழோரம் கற்றாக வேண்டும்

தொட்டாலும் பட்டாலும் கொண்டாடும் காலத்தில்

வெட்கங்கள் பூமாலை போடும்

ஆஹா...வெட்கங்கள் பூமாலை போடும்

நனா நா  நனா நா நனா நா ஹா
நனா நா  நனா நா நனா நா
ஹ  ஹ  ஹ  ஹ  ஹ  ஹா

மாலைக்கு பின்னாலே காலங்கள் பூத்துவர

மானோடு நான் பாட வேண்டும்

ஆஹா...மானோடு நான் பாட வேண்டும்

வானத்தில் பூவாகி மேகத்தில் தேன்பாய

மௌனத்தில் நாம் வாழ வேண்டும்

ஆஹா...மௌனத்தில் நாம் வாழ வேண்டும்

ராகங்கள் பாவங்கள் தாளங்கள் எல்லாமே

மோகத்தில் ஊடாட வேண்டும்

ஆஹா...மோகத்தில் ஊடாட வேண்டும்

தாகங்கள் தீராமல் பருவங்கள் மாறாமல்

தேகங்கள் சுகம் காண வேண்டும்

ஆஹா...தேகங்கள் சுகம் காண வேண்டும்

நனா நா நனா நா நனா நா ஹா


நனா நா நனா நா நனா நா

உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது

அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது

கனவுகளில் உன்னைக்கண்டு வெட்கம் வந்தது

அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிக்கொண்டது

4 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

எனக்கு பிடித்த பாடல்.

பெயரில்லா சொன்னது…

திரு .அசோக் அவர்களே,
நல்ல பாடல் .நினைவூட்டியதற்கு நன்றிகள்.

அன்புடன்
தாஸ்

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

இப்பாடலை எழுதியவர் நா.காமராசன்

கருத்துரையிடுக