பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 13 மார்ச், 2011

போக போக தெரியும்..இந்த பூவின் வாசம் புரியும்

இனிமையான கவிதை வரிகளுடன், இனிமையான குரல்களும் இசையும் இணைந்தால் அதுதான் என்றும் மனதில் நிற்கும் பாடலாகிவிடுகின்றது.


திரைப் படம்: சர்வர் சுந்தரம் (1964)
இசை: M S விஸ்வனாதன், ராமமூர்த்தி
பாடியவர்கள்: PBS, P சுசீலா
இயக்கம்: K பாலசந்தர்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: முத்துராமன், K R விஜயா, நாகேஷ்http://www.divshare.com/download/14292095-686


அஹா ஹா அஹா ஹா
போக போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும்

போக போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும்

ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
திரு தாளம் அதிலே இணையும்

போக போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும்
இந்த பூவின் வாசம் புரியும்

கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன
கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன

கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன
கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன

பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு
ஆட வாராமல் இருப்பதென்ன

பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு
ஆட வாராமல் இருப்பதென்ன

போக போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும்

ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
திரு தாளம் அதிலே இணையும்

போக போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும்

பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன்
கேட்டால் உன் பேரை கேட்டிருப்பென்
பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன்
கேட்டால் உன் பேரை கேட்டிருப்பென்

என் காதல் உனக்காக பாதை வகுத்தாலும்
பயணம் வாராமல் இருப்பதென்ன

என் காதல் உனக்காக பாதை வகுத்தாலும்
பயணம் வாராமல் இருப்பதென்ன

காலம் நேரம் பிறக்கும்
நம் காதல் கதவுகள் திறக்கும்
நம் கண்கள் அப்போது துடிக்கும்
உன் கன்னம் எப்போது சிவக்கும்

போக போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும்
இந்த பூவின் வாசம் புரியும்

அஹா ஹா அஹா ஹா
அஹா ஹா அஹா ஹா

1 கருத்து:

தமிழன்பன் சொன்னது…

//இனிமையான கவிதை வரிகளுடன், இனிமையான குரல்களும் இசையும் இணைந்தால் அதுதான் என்றும் மனதில் நிற்கும் பாடலாகிவிடுகின்றது.//

உங்கள் கூற்றை முழு மனதுடன் ஆதரிக்கின்றேன். தொடருங்கள்....

கருத்துரையிடுக