பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 30 நவம்பர், 2010

அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ

ரொம்பவும் பிரபலமாகாத ஆனால் நல்ல இசையில் அமைந்த பாடல்

படம்:    சிறையில் பூத்த சின்ன மலர்  (1990)
இசை: இளையராஜா
நடிப்பு: விஜயகாந்த், நிஷாந்தி
இயக்கம்: P அமிர்தன்
பாடியவர்கள்: KJY, சித்ராhttp://www.divshare.com/download/13343699-cd8

அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..
அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..
சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதி ஸ்வரம் பாட..
சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதி ஸ்வரம் பாட..
இவளென்ன எனக்கென பிறந்தவளோ..

அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..

நெஞ்சை அள்ளும் வாடைக் கொண்ட தஞ்சைக் கோபுரம் நீ..
நேரில் வந்து தாகம் தீர்க்கும் தீர்த்த பாத்திரம்..

வண்டு வந்து தங்கத் தானே தங்கத் தாமரை..
ஓர் தண்டு கொண்டு நீரில் நிற்க்கும் உள்ள நாள் வரை..

அந்தி வெய்யில் காயும் போது..அன்பு வெள்ளம் பாயும் போது..
சிந்து ஒன்று பாட துணை நான் இல்லையோ..

தொட்டு தொட்டு நீயும் கெஞ்ச..விட்டு விட்டு நானும் கொஞ்ச..
கட்டில் ஒன்று போட மண நாள் இல்லயோ..

திருமணம் புரிவது என்று..துடிக்குது இளமனம் இன்று..
அதுவரை உணர்ச்சிகள் அடங்கிடுமோ..

அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..
சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதி ஸ்வரம் பாட..
சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதி ஸ்வரம் பாட..
இவளென்ன உனக்கென பிறந்தவளோ..

அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..

கண்கள் என்ன நெஞ்சில் பாயும் காம பானமோ..
உன் சொற்கள் என்ன போதை ஏற்றும் சோம பானமோ..

சின்னப் பெண்ணின் வார்த்தை என்ன சங்கப் பாடலோ..
நீ சிந்துகின்ற பார்வை என்ன சொர்க வாசலோ..

என்றும் உள்ள சொந்தம் என்று ஏழு ஜென்ம பந்தம் என்று
நெஞ்சில் கொண்ட நேசம் இது நீங்காதது..

அன்றில் ரெண்டு ஒன்றை ஒன்று அட்டைப் போல ஒட்டிக் கொண்டு
இன்றுக் காணும் இன்பம் நிறம் மாறாதது..

வளருது வளருது மோகம் விளையுது விளையுது தாகம்
இனி இந்த விழிகளில் உறக்கம் உண்டோ..

அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ

நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..

சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதி ஸ்வரம் பாட..
சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதி ஸ்வரம் பாட..
இவளென்ன எனக்கென பிறந்தவளோ..

அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ

நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இளையராஜா + ஜேசுதாஸ் இரு சிகரங்கள் .சூப்பர்..பாடல்.
தாஸ்

கருத்துரையிடுக