பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 19 நவம்பர், 2010

திங்களுக்கு என்ன இன்று திருமணமோ

A L ராகவன், S ஜானகி ஆகியோரின் குரலில் இது ஒரு இனிமைப் பாடல்


திரைப் படம்: பூஜைக்கு வந்த மலர் (1965)

இசை: T K ராமமூர்த்தி
இயக்கம்: முக்தா V ஸ்ரீனிவாசன்
நடிப்பு: ஜெமினி, தேவிகாதிங்களுக்கு என்ன இன்று திருமணமோ

திங்களுக்கு என்ன இன்று திருமணமோ
சுற்றித் திரிகின்ற தாரகை சீதனமோ

பொங்கி வரும் அலைகளில் முதலிரவோ

வண்ணப் பூவோடு மாவிலை தோரணமோதிங்களுக்கும் உங்களுக்கும் புது உறவோ
உம்மை தேடியே வந்தவள் பழங்கதையோ

இங்கிருக்கும் எண்ணம் இன்னும் விளங்கலையோ

இன்று ஏங்கிடும் நான் என்ன உறவில்லையோ

ஏங்கிடும் நான் என்ன உறவில்லையோ

திங்களுக்கும் உங்களுக்கும் புது உறவோ அந்த திங்களும் உனக்கிட்ட பெயரல்லவோ

நுரைப் பொங்கிடும் அலை உந்தன் குழல் அல்லவோ

நான் தங்கிடும் இடம் உந்தன் மனம் அல்லவோ

எனைத் தனியென பிரிப்பது பிழையல்லவோஇந்தக் கன்னியின் பெயரென்ன அழகில்லையோ

அது காதினில் தேனென விழவில்லயோ

இந்தக் கன்னியின் பெயரென்ன அழகில்லையோ

அது காதினில் தேனென விழவில்லயோ

அந்த திங்களின் பெயரென்ன சிறந்ததுவோ

இந்த நங்கையின் மீதொரு கலங்கமுண்டோ

இந்த நங்கையின் மீதொரு கலங்கமுண்டோவரும் கோபமும் குங்குமக் கோலமிடும்

கால் போவது போல் சென்று திரும்பிவிடும்

மனம் ஆயிரம் போர் வகை நடத்தி விடும்

இது ஆரம்பம் தான் அந்த நோய் அல்லவோஇமை விழியை மூடும் வரை திறந்திருக்கும்

அதில் இளமை கொலுவேறி மகிழ்ந்திருக்கும்

இதழ் கனிந்தும் கனியாமல் குவிந்திருக்கும்

இதை காதல் என்பார்கள் சரிதானோ

இதை காதல் என்பார்கள் சரிதானோதிங்களுக்கு என்ன இன்று திருமணமோ

 சுற்றித் திரிகின்ற தாரகை சீதனமோ


பொங்கி வரும் அலைகளில் முதலிரவோ


வண்ணப் பூவோடு மாவிலை தோரணமோ


திங்களுக்கு என்ன இன்று திருமணமோ

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

திரு அசோக் ராஜ் அவர்களே

மீண்டும் அருமையான பாடல் ஒன்று.மிக்க நன்றி.
கண்மணி ராஜா என்ற படத்தில் " ஓடம் கடல் ஓடும் " என்ற ஓர் அருமையான பாடல் இருந்தால் ஓடவிடுங்கள்
மகிழ்வோம்
மீண்டும் நன்றிகள்.

தாஸ்

Unknown சொன்னது…

திரு தாஸ், நீங்கள் கேட்ட பாடல் ஏற்கனவே செப்டெம்பர் மாதம் தரமிறக்கி இருக்கிறேனே கவனிக்கவில்லையா?

கருத்துரையிடுக