பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 30 நவம்பர், 2010

கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு

நல்ல இசையும், குரலும், அர்த்தமுள்ள கவிதையும் இணைந்தால் இனிமையான பாடல் இப்படித்தான் இருக்கும்.

படம்: துளசி மாடம் (1963)

இசை: K V மகாதேவன்
நடிப்பு: விபரம் கிடைக்கவில்லை
இயக்கம்: K B ஸ்ரீனிவாசன்
பாடியவர்: S ஜானகிhttp://www.divshare.com/download/13326733-38fகல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே...

உல்லாச வாழ்க்கை தொடங்குமுன்னே...உல்லாச வாழ்க்கை தொடங்குமுன்னே...
உரிமையாய் அன்போடு அழைக்கட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...

வாசலில் கட்டிய தோரணம் போல்...வரிசையாய் காய்கற் வைக்கட்டுமா..
பாசமுடன் சொன்ன வாய் இனிக்க பாயசம் கொஞ்சம் ஊற்றட்டுமா..
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...

ஊற்றிய வியர்வையை துடைக்கட்டுமா..நெருங்கி நெருங்கி உணரட்டுமா..
பட்டுப் புடவை முந்தாணையால் பக்கத்தில் இருந்தே வீசட்டுமா..
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...

வெட்கப் படாம சாப்பிடுங்க..ஏதும் வேனுமின்னா என்னை கேட்டிடுங்க..
பக்கத்தில்தானே காத்திருக்கேன்..நான் பத்திரமாக பாத்துக்குவேன்..
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...

2 கருத்துகள்:

அப்பாதுரை சொன்னது…

இந்தப் பாட்டை எப்ப்ப்ப்ப்ப்ப்வோ கேட்டிருக்கேன்..

பெயரில்லா சொன்னது…

திரு அசோக் ராஜ் அவர்களே
நல்ல பாடல் .இதயத்தை வருடும்பாடல் ,காதலை ,அன்பை மிக அருமையாக வெளிப்படுத்தும் பாடல்.
உங்கள் ரசனையால் நாமும் எப்பவோ கேட்ட நல்ல பாடல்களை கேட்கிறோம்,மிக்க நன்றி .

தாஸ்

கருத்துரையிடுக