பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 30 நவம்பர், 2010

அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு அவரு

நல்ல இசை குரல்  கவிதைக்கு மீண்டும் ஒரு பாடல்

படம்:  துளசி மாடம் (1963)
இசை: K V மகாதேவன்
நடிப்பு: விபரம் கிடைக்கவில்லை
இயக்கம்: K B ஸ்ரீனிவாசன்
பாடியவர்: S ஜானகி

http://www.divshare.com/download/13326827-79b

அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தைப் பாரு...

அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வருத்தது யாரு...

எதுக்கு இந்த கோபமாம் என்ன கொடுத்தா தீருமாம்
அது கிடக்கு எழுந்து வாங்க ஆடிப் பாடி மகிழலாம்...

கன்னி என்னைப் பாருங்க கல கலப்பா பேசுங்க..
என்ன தவறு கண்டு நீங்க இந்த கோபம் கொண்டீங்க..
கன்னி என்னைப் பாருங்க கல கலப்பா பேசுங்க..
என்ன தவறு கண்டு நீங்க இந்த கோபம் கொண்டீங்க..
அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தைப் பாரு...
அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வருத்தது யாரு...
கோபம் சிரிப்பா மாறுது.. குறும்பு பார்வை பிறக்குது..
பாவம் அத்தான் மனசில் இப்போ ஆசை கிடந்து தவிக்குது...

ஆப்பிள் தோட்டம் எதிரிலே அருந்த பசி வயிற்றிலே..
சாப்பிடத் தான் கூப்பிட்டாலும் ஜம்பம் எதுக்கு புரியலே..
ஆப்பிள் தோட்டம் எதிரிலே அருந்த பசி வயிற்றிலே..
சாப்பிடத் தான் கூப்பிட்டாலும் ஜம்பம் எதுக்கு புரியலே..
அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தைப் பாரு...
அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வருத்தது யாரு...
ஓ ஓ ஓ ஓ ...அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தைப் பாரு...
அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வருத்தது யாரு...

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

என்றுமே கேட்காத பாடல். நன்றிகள பல.
தாஸ்

பெயரில்லா சொன்னது…

AVM ராஜன் நடித்த படம் என நினிக்கிறேன்.
தாஸ்.

கருத்துரையிடுக