பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 30 நவம்பர், 2010

எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று

அழகான ஒரு பாடல்

திரைப் படம்:  தேன் சிந்துதே வானம் (1975)
இயக்கம்: R சங்கரன்
நடிப்பு: கமல், சிவகுமார், ஜெயசித்ரா
இசை: V குமார்
குரல்கள்: TMS ,ஸ்வர்னாhttp://www.divshare.com/download/13362889-02b

எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று எனக்காக நேரில் வந்ததோ...

கண்ணா உன் கவிதை இங்கே கலையாத கற்பனை எங்கே...தந்தம் போல் சொந்தம் கொண்டேன் எண்ணம் போல் வண்ணம் கொண்டேன்...

எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை இன்று உனக்காக நேரில் வந்ததோ...

மன்மதன் என்பவன் மந்திரம் சொல்வது மாலை நேரமோ...

என்னிடம் சொன்னதை உன்னிடம் சொன்னால் மையல் தீருமோ...

மன்மதன் என்பவன் மந்திரம் சொல்வது மாலை நேரமோ...

ஆ ஆ ஆ என்னிடம் சொன்னதை உன்னிடம் சொன்னால் மையல் தீருமோ...

மடல் வாழை மேனி கண்டு....

மலர் தோட்ட ராணி என்று...

மடல் வாழை மேனி கண்டு....

மலர் தோட்ட ராணி என்று...

தொடும் போது வெட்கம் வந்து தடை போடுமோ...

எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று

எனக்காக நேரில் வந்ததோ...

புத்தகம் போல் உனை நித்தம் படித்திடும் பருவம் அல்லவோ...

முன்னுரை நீயென முடிவுரை நான் என பாடம் சொல்லவோ...

புத்தகம் போல் உனை நித்தம் படித்திடும் பருவம் அல்லவோ...

முன்னுரை நீயென முடிவுரை நான் என பாடம் சொல்லவோ...

ஒரு பாதி நெஞ்சம் சொல்ல...

மறு பாதி மஞ்சம் சொல்ல...

ஒரு பாதி நெஞ்சம் சொல்ல...

மறு பாதி மஞ்சம் சொல்ல...

உயிர் காதல் கவிதை ஒன்று உருவாகுமோ...

எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று எனக்காக நேரில் வந்ததோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக