பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 23 நவம்பர், 2010

நெஞ்சினிலே நினைவு முகம்.. நிலவிலும் தெரிவதுன் அழகு

திரு தாஸ் அவர்களின் விருப்பப் பாடல் மட்டும் இல்லை மிகவும் அழகாக முக்கோனக் காதலை கவிதையாக்கி இசையமைத்து பாடியிருக்கிறர்கள்.திரைப் படம்: சித்ராங்கி (1964)

இயக்கம்: R S மணி
நடிப்பு: A V M ராஜன், புஷ்பலதா
இசை: S வேதா
குரல்கள்: T M S, P சுசீலா, ஜமுனா ராணி


http://www.divshare.com/download/13291867-14a
நெஞ்சினிலே.....
நெஞ்சினிலே நினைவு முகம்.. நெஞ்சினிலே நினைவு முகம்.. நிலவிலும் தெரிவதுன் அழகு முகம்.. ஆசை முகம்...
நெஞ்சினிலே நினைவு முகம்..

ஆருயிர் என்று அழைத்தவளே...
புது ஆசை நெஞ்சில் விதைத்தவளே..
ஆருயிர் என்று அழைத்தவளே...
புது ஆசை நெஞ்சில் விதைத்தவளே..
நான் ஓருயிர் நின்று தவிக்கையிலே நீ ஓடி மறைந்தது நீதி இல்லை...
நெஞ்சினிலே நினைவு முகம்.. நிலவிலும் தெரிவதுன் அழகு முகம்.. ஆசை முகம்...
நெஞ்சினிலே நினைவு முகம்..

வானத்தின் தாரகை பூவெடுத்தேன் என்றும் வாடாத மாலையாய் நான் தொடுத்தேன்...
வானத்தின் தாரகை பூவெடுத்தேன் என்றும் வாடாத மாலையாய் நான் தொடுத்தேன்...
அதில் தேன் இல்லையே என்று சொல்லி விட்டாய்..விரல் தீண்டாமலே மண்ணில் தள்ளிவிட்டாய்...தள்ளிவிட்டாய்...
நெஞ்சினிலே நினைவு முகம்.. நிலவிலும் தெரிவதுன் அழகு முகம்.. ஆசை முகம்...
நெஞ்சினிலே நினைவு முகம்..ஆயிர்ம் கோட்டைகள் கட்டி வைத்தேன் என் அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன்..
ஆ ஆ ஆ ஆ...ஆயிர்ம் கோட்டைகள் கட்டி வைத்தேன் என் அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன்..
அந்த கோவிலிலே எந்தன் தெய்வமில்லை...நான் கோரிய வரமும் கிடைக்கவில்லை...

நெஞ்சினிலே நினைவு முகம்.. நிலவிலும் தெரிவதுன் அழகு முகம்.. ஆசை முகம்...
நெஞ்சினிலே நினைவு முகம்..

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம் திரு .அசோக் ராஜ்
மிக்க நன்றி.மிக அருமையான பாடல்.இசையமைப்பாளர் வேதா அவர்கள் மிக சிறந்த இசையமைப்பாளர் என்பதற்கு இந்த பாடல் சிறந்த உதாரணம்.துரதிஸ்ட வசமாக அவரை ஹிந்தி பாடல்களை பிரதி பண்ண வைத்த தயாரிப்பாளர்களை என்ன சொல்வது.?
வேதாவின் தனி தன்மையை காட்டும் காவிய பாடல் ஒன்று பார்த்திபன் கனவு என்ற படத்தில் இடம் பெற்ற " இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய் " எ.எம் .ராஜ + சுஷீலா பாடியது.
முடியுமென்றால் அதையும் கேட்டக ஆவலாய் உள்ளோம்.நெஞ்சி நிறைந்த பாடல்களை வழங்கும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
வாழ்த்துக்கள்.

அன்புடன்
தாஸ்

Unknown சொன்னது…

தாஸ், நன்றிகள். நீங்கள் விரும்பிய பாடல் விரைவில் வரும். அதற்க்கு முன் திரு வேதாவின் மற்றுமொரு அருமையான பாடலான பார்த்தாய்.. பார்த்தேன்... அதுவும் சுசீலாவும் ராஜாவும் இணைந்து பாடியது ஜூன் மாத இதழில் உள்ளது. கேட்டு மகிழுங்கள். அருமையான இசையில் சுகமான குரல்களில் ஒலிக்கின்றது.

Unknown சொன்னது…

தாஸ், நீங்கள் கேட்ட இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய் பாடல் ஆகஸ்ட் மாத இதழில் உள்ளதே. நானும் மறந்துவிட்டேன். கேளுங்கள்

பெயரில்லா சொன்னது…

எத்தனை தடவை தான் இந்த பாடலை நான் கேட்பது.? நாம் கட்டிய கோட்டைகளும் சரிந்து போனதா ?
நாம் எதை மறப்பது? மனதை நோக வைக்கும் பாடல் .அதிலும் ஒரு சுகம் .அது தான் இசையின் மகத்துவமோ ?
நன்றி அசோக் ராஜ் அவர்களே.!

தாஸ்.

கருத்துரையிடுக