பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 16 நவம்பர், 2010

படைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...

அழகான பாடல் கௌரவமான வர்ணனை

படம்: எல்லோரும் நல்லவரே (1975)

இசை: V குமார்
இயக்கம்: S S பாலன்
நடிப்பு: முத்துராமன், மஞ்சுளா
குரல்: S P B
 http://www.divshare.com/download/13198282-2e1


படைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...

படைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...

இது யார் மீது பலி வாங்கும் சோதனை...

உன்னைக் காண்போர்க்கு சுகமான வேதனை...

படைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...அந்தக் கண்ணாடி நீ பார்க்கும் கண்ணாடியா...

இல்லை உன் மேனி அது பார்க்கும் கண்ணாடியா...

நீயின்றி வானத்தில் நிலவேதடி...

அது உனைப் பாடும் தாலாட்டு நீலாம்பரி...

இது யார் மீது பலி வாங்கும் சோதனை...

உன்னைக் காண்போர்க்கு சுகமான வேதனை...

படைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...உன்னை ரவிவர்மன் காணாமல் போனானடி...

அந்த ரதி மாறன் கண்டாலும் தொலைந்தானடி...

உன்னை ரவிவர்மன் காணாமல் போனானடி...

அந்த ரதி மாறன் கண்டாலும் தொலைந்தானடி...

இது கோடியில் ஒருத்திக்கு வாய்க்கின்றது..

அது கோடான கோடியை ஏய்க்கின்றது...

ஒரு அருள் வேண்டி நான் கேட்பேன் தேவனை...

இனி தினந்தோறும் வர வேண்டும் சுக வேதனை...படைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...

இது யார் மீது பலி வாங்கும் சோதனை...

உன்னைக் காண்போர்க்கு சுகமான வேதனை...

படைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக