திருமதி சுசீலா உச்சஸ்தாயில் பாடிய ஒரு சில பாடல்களில் இது ஒன்று.
இனிமையானது
படம்; மலர்களிலே அவள் மல்லிகை (1983)
இசை; சங்கர் கணேஷ்
நடிப்பு; பண்டரி பாய் (மற்ற விபரங்கள் கிடைக்கவில்லை)
பாடியவர்கள்: P சுசீலா, ஜெயசந்திரன்
http://www.divshare.com/download/12397576-3bd
சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்...கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்...
சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்...கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்...
சிந்து நதியோரம்.....
கன்னி இள மயில் சின்ன மணிக் குயில் என்னை நெருங்கிடும் போது எண்ணம் போகும் தூது...
கையிரெண்டில் அள்ளி காதல் கதைச் சொல்லி உள்ளம் மகிழ்ந்திடும் போது இன்பம் வேறு ஏது...
நெஞ்சில் எடுத்தேன் கொஞ்சிக் களித்தேன் வஞ்சி உனக்கென்று வாழ்கிறேன்..
இன்னும் எதெற்கென்ன பார்வையோ என்ன தேவையோ... என்ன தேவையோ... ஹோ...
சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்...கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்...
சிந்து நதியோரம்.....
சின்னஞ்சிறு சிட்டு உந்தன் கைகள் பட்டு தன்னை மறந்திடும் போது தனிமை என்பதேது...
மொட்டவிழ்ந்த முல்லை கட்டழகின் எல்லை தொட்டுத் தழுவிடும் போது சொர்க்கம் வேறு ஏது...
மங்கை அழகி மலையருவி பொங்கி பெருகிடும் என் மனம்...
கங்கை நதிக்கென்ன தாகமோ என்ன வேகமோ தன்னை மீறும் போது
சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்...
கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்...
சிந்து நதியோரம்.....
1 கருத்து:
யுகமாச்சுங்க இந்தப் பாட்டைக் கேட்டு.. நன்றி
கருத்துரையிடுக