திருமதி சுசீலாவின் வசீகரமான குரலில் இந்த பாடல். அவரைத் தவிர வேறு யாராலும் இது போல பாடமுடியாது.
படம்; தாழம்பூ (1965)
இசை: K V மகாதேவன்
இயக்கம்: M S ராமதாஸ்
நடிப்பு: MGR ,K R விஜயா
http://www.divshare.com/download/12395190-cec
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பங்குனி மாதத்தில் ஓர் இரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு...
தங்கத்தில் மிதந்தது மண்ணழகு அங்கு தனியே தவித்தது பெண்ணழகு...

பங்குனி மாதத்தில் ஓர் இரவு...
காதல் தலைவன் வரவில்லையாம் கன்னத்தில் ஒன்று தரவில்லையாம்...

தூது விட்டாலும் பதில் இல்லையாம் அவள் துடித்தாளாம் எண்ணி தவித்தாளாம்..
அவள் துடித்தாளாம் எண்ணி தவித்தாளாம்..
பங்குனி மாதத்தில் ஓர் இரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு...
மல்லிகை மலரை நெருப்பென்றாள் வரும் மணியோசைதனை இடியென்றாள்...

மெல்லிய பனியை மழையென்றாள்...தன் மேனியையே வெறும் கூடென்றாள்...
பங்குனி மாதத்தில் ஓர் இரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு...
காலடி ஓசை கேட்டுவிட்டாள் அந்தக் கட்டழகன் முகம் பார்த்துவிட்டாள்...

நாலடி நடந்தாள் முன்னாலே அங்கு நடந்தது என்னவோ பின்னாலே...
பங்குனி மாதத்தில் ஓர் இரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு...
தங்கத்தில் மிதந்தது மண்ணழகு அங்கு தனியே தவித்தது பெண்ணழகு...
பங்குனி மாதத்தில் ஓர் இரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு...
தங்கத்தில் மிதந்தது மண்ணழகு அங்கு தனியே தவித்தது பெண்ணழகு...
பங்குனி மாதத்தில் ஓர் இரவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக