பின்பற்றுபவர்கள்

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

கல்யாணக் கோவிலின் தெய்வீக கலசம்....

சத்யம் திரைப்படத்திலிருந்து இந்த சுவையான பாடல். சிவாஜி கணேசன், கமல், ஜெயசித்ரா நடித்த படம். SPB, P சுசிலா பாடியது.
மேற்கொண்டு விபரங்கள் கிடைக்கவில்லை. அதனால் போனஸாக திருமதி சுசிலா தனித்து சோகமாக பாடிய பாடலையும் இத்துடன் இணைத்துள்ளேன்.http://www.divshare.com/download/12377019-b55ஹோ ஹோ ஹோ ஹோ ல ல லல ல ல ல லஆ ஆ ஆ ஆகல்யாணக் கோவிலின் தெய்வீக கலசம்....

கல்யாணக் கோவிலின் தெய்வீக கலசம்....

கண்களில் தெரியுது தெளிவாக...

வானப் பட்டு மேகம் காதல் தட்டில் ஏறி ஆடட்டும் ஓடட்டும் ஆனந்தம் பாடட்டும் கண்ணே...

கல்யாணக் கோவிலின் தெய்வீக கலசம்....வாழையும் கமுகும் தோரணப் பந்தல் மணவரை மனச்சங்கு மணிதீபங்கள்...தோழியர் கேலி தோகையர் வாழ்த்து சொர்க்கத்தில் உண்டாகும் சுக ராகங்கள்...இந்த கனவானது...என்று நனவாகுமோ...அதை தெய்வங்கள் கூறட்டும் சொந்தங்கள் சேரட்டும் கண்ணா...

கல்யாணக் கோவிலின் தெய்வீக கலசம்....

கண்களில் தெரியுது தெளிவாக...

வானப் பட்டு மேகம் காதல் தட்டில் ஏறி ஆடட்டும் ஓடட்டும் ஆனந்தம் பாடட்டும் கண்ணா...

கல்யாணக் கோவிலின் தெய்வீக கலசம்....சந்தனம் பன்னீரின் அருவி தரையில் நடக்கும் மனம் பரவி...மந்திரம் வேதங்கள் முழங்கி மயக்கம் கொடுக்கும் மனம் தழுவி...மங்களம் நீந்தும் குங்குமச் சாந்து மல்லிகை மலர் மாலை பெண் பாதியும்...கைகளில் காப்பு கால்களில் வெள்ளி கனிவுரும் களிப் பாகை ஆண் பாதியும்...இன்ப மண நாள் அன்றோ...அந்த திரு நாள் என்றோ...அதை தெய்வங்கள் கூறட்டும் சொந்தங்கள் சேரட்டும் கண்ணே...கல்யாணக் கோவிலின் தெய்வீக கலசம்....கண்களில் தெரியுது தெளிவாக...வானப் பட்டு மேகம் காதல் தட்டில் ஏறிஆடட்டும் ஓடட்டும் ஆனந்தம் பாடட்டும் கண்ணே...கல்யாணக் கோவிலின் தெய்வீக கலசம்....

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக