பின்பற்றுபவர்கள்

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே...

சங்கர் கணேஷ் இசையில் ஒரு நல்ல பாடல்


படம்: சின்ன முள் பெரிய முள் (1981)

நடிப்பு: அஞ்ஜு, ஸ்ரீ நாத்

பாடல்: வாலி

குரல்கள்: ஜெயசந்திரன், S ஜானகி

இயக்கம்: ராஜ் பரத்
http://www.divshare.com/download/12379980-019


இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரைப்போலவே

இயற்கை அழகியின் இளமை கோலமோ

இது நாள் வரையில் தெரியா அழகை

இன்றுதான் அறிந்ததோ கண்கள்இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரைப்போலவேபுதிய அனுபவம் ஒளிரும் விழிகள் இரண்டிலே

புதிய அனுபவம் ஒளிரும் விழிகள் இரண்டிலே

ஒரு புதுமை மலரும் வேளை இந்த உலகை காணும் பாவை

ஒரு புதுமை மலரும் வேளை இந்த உலகை காணும் பாவைஇதயமே கனிந்ததோ இனிமையே தவழ்ந்ததோ

இதயமே கனிந்ததோ இனிமையே தவழ்ந்ததோஇரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரைப்போலவேசிட்டு ஒன்று தொட்டுத் தொட்டு பட்டு இதழ் மலருதோ

மொட்டு முகம் விட்டு விட்டு தொட்ட சுகம் தொடருமோ

மலைகள் இறங்கி தரும் அருவி இறங்கி வரும்

அழகே...கண்கள்...பாடும்...கவிதைகளோஇரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரைப்போலவேமலரின் சிரிப்பிலே தனிமை மயக்கம் தெளிந்ததோ

மலரின் சிரிப்பிலே தனிமை மயக்கம் தெளிந்ததோஇந்த மாற்றம் தந்த பருவம் கொண்ட ஏக்கம் இன்று விலகும்

இந்த மாற்றம் தந்த பருவம் கொண்ட ஏக்கம் இன்று விலகும்மனதிலே புது சுகம் நிறைந்ததோ வளர்ந்ததோ

மனதிலே புது சுகம் நிறைந்ததோ வளர்ந்ததோஇரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரைப்போலவேஇயற்கை அழகியின் இளமை கோலமோ

இது நாள் வரையில் தெரியா அழகை

இன்றுதான் அறிந்ததே கண்கள்

இன்றுதான் அறிந்ததே கண்கள்

இன்றுதான் அறிந்ததே...கண்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக