மென் காதலின் அருமை சொல்லும் பாடல்
படம்: விடிவெள்ளி (1960)
நடிப்பு; சிவாஜி, பாலாஜி, சரோஜா தேவி
இயக்கம்: ஸ்ரீதர்
இசை: A M ராஜா
பாடல் ஆக்கம்: கண்ணதாசன்
http://www.divshare.com/download/12409285-ee8
இடை கையிரெண்டில் ஆடும்...சிறு கண்ணிரெண்டும் மூடும்...உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே...காதல் கீதம் பாடுமே...
விழி மூடும் போதும் பார்க்கும்.. இதழ் தூங்கும் போதும் பேசும் ..இடை சாயும் போது காதலின் சாரம் கூறுமே.. ஆசை கீதம் பாடுமே...
அந்தி நேரம் வந்தாலே காதல் வேகம் உண்டாகும்...பெற்றத் தாயை கண்ட போதும் நெஞ்சில் கோபம் உண்டாகும்...
அந்தி நேரம் வந்தாலே காதல் வேகம் உண்டாகும்...பெற்றத் தாயை கண்ட போதும் நெஞ்சில் கோபம் உண்டாகும்...
பிறர் பார்த்துவிட்டாலும் பெண்மை நானம் கொண்டாடும்...அதை பார்க்க பார்க்க காளை நெஞ்சில் போதை உண்டாகும்...
அதை பார்க்க பார்க்க காளை நெஞ்சில் போதை உண்டாகும்...
இடை கையிரெண்டில் ஆடும்...சிறு கண்ணிரெண்டும் மூடும்...உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே...காதல் கீதம் பாடுமே...
சிறு பிரிவுமில்லாமல் இன்ப சிறகுகளாலே ஒரு முடிவுமின்றி பறந்து செல்வோம் பறவைகள் போலே..
சிறு பிரிவுமில்லாமல் இன்ப சிறகுகளாலே ஒரு முடிவுமின்றி பறந்து செல்வோம் பறவைகள் போலே..
ஒரு பேதமில்லாமல் சேர்ந்த காதலினாலே நாம் உறவுக் கொண்டு உயிர் கலந்தோம் ஒருவரைப் போலே...
நாம் உறவுக் கொண்டு உயிர் கலந்தோம் ஒருவரைப் போலே...
இனி காலம் எங்கள் காலம்..சுக வாழ்வு எங்கள் வாழ்வு உயர் பூமியெல்லாம் காதலின் கீதையாகுமே...தென்றல் கீதம் பாடுமே..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக