பின்பற்றுபவர்கள்

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

கொஞ்சி வரும் நெஞ்சில் இன்று கோபம் என்னடா

கணவனின் கோபம் ஒரு பக்கம், குழந்தையின் கோபம் ஒரு பக்கம். மிக அருமையாக அமைந்துள்ள பாடல். ரசித்துக் கேட்டால் இன்பமான பாடல்.


படம்: எல்லாம் உனக்காக (1961)

நடிப்பு: சிவாஜி, சாவித்ரி

இசை: K V மகாதேவன்

இயக்கம்: S சுப்பாராவ்
http://www.divshare.com/download/12377095-de6கொஞ்சி வரும் நெஞ்சில் இன்று கோபம் என்னடா அய்யா கோபம் என்னடா..

குற்றமற்ற அன்னை செய்த பாவம் என்னடா..அய்யா பாவம் என்னடா..

கொஞ்சி வரும் நெஞ்சில் இன்று கோபம் என்னடா அய்யா கோபம் என்னடா..

குற்றமற்ற அன்னை செய்த பாவம் என்னடா..அய்யா பாவம் என்னடா..தஞ்சம் என்று வந்தவர்க்கு தாயும் அல்லவா அவர் தாயுமல்லவா...

அந்த தாய் வெறுத்த காரணத்தை கேட்டுச் சொல்லடா...

தஞ்சம் என்று வந்தவர்க்கு தாயும் அல்லவா...

அந்த தாய் வெறுத்த காரணத்தை கேட்டுச் சொல்லடா...

நீ கேட்டுச் சொல்லடா...

கொஞ்சி வரும் நெஞ்சில் இன்று கோபம் என்னடா..

குற்றமற்ற அன்னை செய்த பாவம் என்னடா..அய்யா பாவம் என்னடா..காலொடிந்த பறவை என்று கைகள் கொடுத்தார்...

அன்று கைகள் கொடுத்தார்...

இன்று கண் மறைக்கும் கோபம் கொண்டு வார்த்தை தொடுத்தார்...

காலொடிந்த பறவை என்று கைகள் கொடுத்தார்...

அன்று கைகள் கொடுத்தார்...

இன்று கண் மறைக்கும் கோபம் கொண்டு வார்த்தை தொடுத்தார்...

கடும் வார்த்தை தொடுத்தார்...

கொஞ்சி வரும் நெஞ்சில் இன்று கோபம் என்னடா..

குற்றமற்ற அன்னை செய்த பாவம் என்னடா..அய்யா பாவம் என்னடா..மக்களுக்கு கோபம் வந்தால் மன்னர்க்கு சொல்வோம்...

கொண்ட மன்னவர்க்கு கோபம் வந்தால் யாரிடம் சொல்வோம்...

மக்களுக்கு கோபம் வந்தால் மன்னர்க்கு சொல்வோம்...

கொண்ட மன்னவர்க்கு கோபம் வந்தால் யாரிடம் சொல்வோம்...

நான் உன்னிடம் சொல்வேன் நீயே கேட்டுச் சொல்லடா...

நான் உன்னிடம் சொல்வேன் நீயே கேட்டுச் சொல்லடா...

குற்றமற்ற அன்னை செய்த பாவம் என்னடா..நீயே கேட்டுச் சொல்லடா...

நீயே கேட்டுச் சொல்லடா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக