தனது தோழியின் வருங்காலக் கணவனை தோழி கேலி செய்வதும், அதற்கு அவன் காதலி அழகாக பதில் சொல்வதும் நல்ல தமிழில் ஒரு புதிய கவிஞரின் பாடலில் இனிமையான இசையில் வருகிறது.
திரைப் படம்: இதயத்தில் நீ (1963)
குரல்கள்: P சுசீலா, L R ஈஸ்வரி
பாடல்: மாயவ நாதன்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: ஜெமினி, தேவிகா
இயக்கம்: முக்தா V ஸ்ரீனிவாசன்
http://www.divshare.com/download/15724571-b40
சித்திரப்பூவிழி வாசலிலே வந்து
யார் நின்றவரோ - இந்தக்
கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்திட
யார் வந்தவரோ
யார் நின்றவரோ...
யார் வந்தவரோ..
சித்திரப்பூவிழி வாசலிலே வந்து
யார் நின்றவரோ - இந்தக்
கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்திட
யார் வந்தவரோ
யார் நின்றவரோ...
யார் வந்தவரோ..
தென்றல் அழைத்து வர - தங்கத்
தேரினில் வந்தாரே
புன்னகை மின்னிட வந்து அருகினில்
நின்றவர் என்னவரே - இடம்
தந்த என் மன்னவரே
சித்திரப் பூவிழி வாசலிலே அவர்த்தான்
நின்றவரே - இந்தக்
கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்தவர்
தான் என்னவரே
யார் நின்றவரோ - அவர்
தான் என்னவரே
கட்டழகில் கவி கம்பன் மகனுடன்
ஒட்டி இருந்தவரோ - இந்தப்
பட்டு உடலினை தொட்டணைக்கும் கலை
கற்றுத் தெளிந்தவரோ
கட்டழகில் கவி கம்பன் மகனுடன்
ஒட்டி இருந்தவரோ - இந்தப்
பட்டு உடலினை தொட்டணைக்கும் கலை
கற்றுத் தெளிந்தவரோ
உன்னை
மட்டும் அருகினில் வைத்து தினம் தினம்
சுற்றி வருபவரோ - - நீ
கற்றுக் கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும்
முத்தமிழ் வித்தகரோ - கலை
முற்றும் அறிந்தவரோ - காதல்
மட்டும் தெரிந்தவரோ
சித்திரப்பூவிழி வாசலிலே வந்து
யார் நின்றவரோ - இந்தக்
கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்திட
யார் வந்தவரோ
வண்ணக் கருவிழி தன்னில் ஒரு விழி
என்று அழைப்பதுவோ - பசும்
பொன்னிற் புதியதைக் கண்ணன் எனப்
பெயர் சொல்லித் துதிப்பதுவோ
வண்ணக் கருவிழி தன்னில் ஒரு விழி
என்று அழைப்பதுவோ - பசும்
பொன்னிற் புதியதைக் கண்ணன் எனப்
பெயர் சொல்லித் துதிப்பதுவோ
ஒளி
மின்னி வரும் இரு கண்ணசைவில் கவி
மன்னவன் என்பதுவோ - இல்லை
தன்னைக் கொடுத்தென்னைத் தன்னில் மறைத்தவர்
வண்ணப் புதுமலரே - அவர்
நெஞ்சம் மலரணையே - மனம்
எங்கும் நிறைந்தவரே
ஓ..ஓ....ஓ..ஓ...
சித்திரப் பூவிழி வாசலிலே அவர்த்தான்
நின்றவரே - இந்தக்
கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்தவர்
தான் என்னவரே
யார் நின்றவரோ - அவர்
தான் என்னவரே
1 கருத்து:
Dear Sir
I love the good old songs from your blog. I am looking for the song " kaalam namakku thozhan". I think film name is "peththa manam pithtu" If you have could you please give us to enjoy.
Thanks.
Packirisamy N
கருத்துரையிடுக