முதல் நான்கு வரிகள் குழந்தையை பார்த்து பாடுவது போல அமைந்து பின்பு வரும் வரிகளில் காதலியை வர்ணிக்கிறார் கவிஞர். ஜெயசந்திரன் குரலில் பாடல் அருமை.
திரைப் படம்: ஒரே முத்தம் (1980)
இயக்கம்: C K|முகிலன்
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெய்கணேஷ், சுமித்ரா
குரல்: ஜெயசந்திரன்
Free Music - Audio Hosting - Rajaa Ponnu adi
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
உனக்காகத்தானே பொன்னோடமே
உன்னோடுதானே கல்யாணமே
நமக்காகத்தானே நதியோட்டமே
நாம் கண்ட வாழ்வு விதியோட்டமே
மனம் வெள்ளைதான்
உடை வெள்ளைதான்
மனம் வெள்ளைதான்
உடை வெள்ளைதான்
ஆனாலும் என் நெஞ்சம் உன்னோடுதான்
காவியம் வாழ்வொரு காவியம்
அதிலே புதிதாய் கதையெழுது
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
செந்தூரம் கொஞ்சம் நான் வைக்கவா
சிங்காரப் பூவை நான் சூட்டவா
கல்யாணத் தேரில் நாம் போகலாம்
கற்பூர தீபம் நான் ஏற்றவா
பொன்னாரமே வெண்மேகமே
பொன்னாரமே வெண்மேகமே
புது வாழ்வு காண்கின்ற என் கீதமே
காவியம் வாழ்வொரு காவியம்
அதிலே புதிதாய் கதையெழுது
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
2 கருத்துகள்:
இப்போதுதான் இப்பாடல் கேட்கிறேன். நன்றாக உள்ளது. உங்களிடமிருந்து இன்னும் வரவிருக்கும் முத்துக்களுக்காக ஆவலுடன் காத்துள்னேன். நன்றி. என் ஈமெயில் கிடைத்ததா?
ஏன் மகிழ்ச்சி பாடலை விட்டு விட்டு சோகப்பாடலை தேர்ந்தெடுத்தீர். இருந்தாலும் இரண்டு பாடல்களுமே அருமை !!
கருத்துரையிடுக