பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 19 நவம்பர், 2010

அன்பே உன் பெயர் அன்னை... அழகே உன் பெயர் மங்கை...

இந்தப் பாடல் ஒரு நல்ல கற்பனைக் கவிதை. TMS பாடுவது SSR பாடுவதை போலவே அமைந்துள்ளது.

திரைப்படம்: படித்த மனைவி (1965)
இசை: K V மகாதேவன்
நடிப்பு:, S S R,  விஜயகுமாரி
இயக்கம்: N கிருஷ்னசாமி

http://www.divshare.com/download/13232148-296

அன்பே உன் பெயர் அன்னை... அழகே உன் பெயர் மங்கை...

அறிவே உன் பெயர் தலைவி... இந்த அமைப்பே எந்தன் மனைவி...

பொன்மகள் தந்த முகம் கொண்டாள்...பூ மகள் வாழும் எழில் கொண்டாள்...

மண் மகள் பொறுமையை நீ கொண்டாய்...குல மகளே பயம் நீ ஏன் கொண்டாய்...

ஏவல் செய்வதில் பணி மகள் நீ...ஏற்றது சொல்வதில் மந்திரி நீ...

அழகு சிலை நீ மஞ்சத்திலே...பேசிப் பழகும் தமிழ் நீ இன்பத்திலே...

பழகும் தமிழ் நீ இன்பத்திலே...

அன்பே உன் பெயர் அன்னை... அழகே உன் பெயர் மங்கை...

படித்த பெண்களை மணப்பதற்கும்...பயப்படுவார் அஞ்சி ஓடிடுவார்...

உன் பண்பையும் அறிவையும் பார்த்தால் அவர்கள் படித்தப் பெண்ணையே தேடிடுவார்...

படித்த பெண்களை மணப்பதற்கும்...பயப்படுவார் அஞ்சி ஓடிடுவார்...

உன் பண்பையும் அறிவையும் பார்த்தால் அவர்கள் படித்தப் பெண்ணையே தேடிடுவார்...

அன்பே உன் பெயர் அன்னை... அழகே உன் பெயர் மங்கை...

அறிவே உன் பெயர் தலைவி... இந்த அமைப்பே எந்தன் மனைவி...

1 கருத்து:

அப்பாதுரை சொன்னது…

எல்லாமே அருமையான பாடல்கள்!

கருத்துரையிடுக