திரு தாஸ் அவர்களின் தேர்வு இந்தப் பாடல். நல்லதொரு பாடல். நமக்கும் பிடித்த பாடல்தான். அவர் இந்த பாடலை விரும்பியதை அவரது சொந்த கருத்துக்களுடன் இங்கே
படம்: முத்தான முத்தல்லவோ (1976)
பாடியவர்கள்: கோவை சௌந்தரராஜன், B சசிரேகா
கவிஞர் : வாலி
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
நடிப்பு: முத்துராமன், சுஜாதா
இயக்கம்: R விட்டல்
பாடகர் பாடும் போது எம்.எஸ்.வியின் சாயல் இருப்பதை கவனியுங்கள்.அது தான் எம்.எஸ்.வியின் சிறப்பு. சொல்லி கொடுக்கும் போது பாடகர்கள் அவரின் தாக்கத்திற்கு உட்பட்டு விடுவார்கள்.பெரும்பாலும் எல்லா பாடகர்களும் அவரின் ஆளுமைக்கு உட்பட்டு விடுவர்.இதற்க்கு பல பாடகர்களின் பாடல்களையும் உதாரணமாக காட்டலாம்.இந்த சிறப்பு எம்.எஸ்.விக்கு மட்டும் உரியது.
சசிரேகாவும் மிக அற்புதமாக குரல் கொடுத்துள்ளார்.பொதுவாக வசந்தா என்ற பாடகியே ஹம்மிங்க் செய்வார்.சசிரேகா வின் குரல் அபாரமாக உள்ளது.
http://www.divshare.com/download/15837617-3ef
புன்னை மரம் ஒண்ணு தென்னை மரம் ஒண்ணு
புன்னை மரம் ஒண்ணு தென்னை மரம் ஒண்ணு
கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு
கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு
காணக்காண ஏக்கம் காளை என்னை தாக்கும்
காணக்காண ஏக்கம் காளை என்னை தாக்கும்
கட்டி வச்ச ஆசை எட்டி எட்டி பாக்கும்
கட்டி வச்ச ஆசை எட்டி எட்டி பாக்கும்
புன்னை மரம் ஒண்ணு தென்னை மரம் ஒண்ணு
கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு
தந்தானே தானா தந்தானே தந்தானே நானெ நா ஆ
தந்தானே நானெ நா ஆ தந்தானே நானெ நா ஆ
மரங்கொத்தி பறவைகள் தாளமிட
மரங்கொத்தி பறவைகள் தாளமிட
மாங்குயில் பூங்குயில் பாட்டிசைக்க
ஓஹோ ஹொ ஹொய்யா ஹா ஹா ஹா ஹா
மரங்கொத்தி பறவைகள் தாளமிட
மாங்குயில் பூங்குயில் பாட்டிசைக்க
சரங்கட்டி வச்சேன் மாலையிட
அடி சம்மதம்மா சொல்லு கூடவர
சரங்கட்டி வச்சேன் மாலையிட
அடி சம்மதம்ம சொல்லு கூடவர
கட்டு சேவல் இங்கே பெட்டை கோழி அங்கே
ஒண்ணை ஒண்ணு கண்டு ஒட்டிகொள்வதென்று
புன்னை மரம் ஒண்ணு தென்னை மரம் ஒண்ணு
கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு
மலரடி நோகும் பாத்து நட
மாமணி பூங்கரம் சேத்து நட
ஓஹோ ஹொ ஹொய்யா ஹா ஹா ஹா ஹா
மலரடி நோகும் பாத்து நட
மாமணி பூங்கரம் சேத்து நட
இடமுண்டு இங்கே நாத்து நட
நல்ல நெல்மணி மெல்ல பூத்து வர
இடமுண்டு இங்கே நாத்து நட
நல்ல நெல்மணி மெல்ல பூத்து வர
மஞ்சள் வெய்யில் வந்து மாலை நேர சிந்து
சொல்ல சொல்ல இன்னும் என்னன்னவோ பண்ணும்
புன்னை மரம் ஒண்ணு தென்னை மரம் ஒண்ணு
கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு
தந்தானே தானா தந்தானே தந்தானே நானெ நா ஆ
தந்தானே நானெ நா ஆ தந்தானே நானெ நா ஆ
1 கருத்து:
புன்னை மரம் ஒண்ணு தென்னை மரம் ஒண்ணு
கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு
அருமையான பகிர்வு.
கருத்துரையிடுக