பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 13 ஜூன், 2010

பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்

பொதுவாகவே இந்த இருவரின் குரலிசையில் வந்த பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பான பாடல்களாக அமைந்துவிட்டன.

திரைப் படம்:மணப் பந்தல்

பாடியவர்கள்: ஸ்ரீனிவாஸ், சுசீலா

இசை: விஸ்வ நாதன் - ராமமூர்த்தி

எழுதியவர்: கண்ணதாசன்
http://www.divshare.com/download/11689180-0daபார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்

நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்...

பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்...

நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்...

நேற்று வந்த நினைவினிலே நெஞ்சம் இழந்தேன்....

நேற்று வந்த நினைவினிலே நெஞ்சம் இழந்தேன்....

நீங்கள் நேரில் வந்து நின்ற உடன் என்னை மறந்தேன்...

நேற்று வந்த நினைவினிலே நெஞ்சம் இழந்தேன்....

நீங்கள் நேரில் வந்து நின்ற உடன் என்னை மறந்தேன்...

காத்திருந்து காத்திருந்து பெருமை இழந்தேன்...

காத்திருந்து காத்திருந்து பெருமை இழந்தேன்...

தென்றல் காற்று வைத்த நெருப்பினிலே ஆவி இழந்தேன்...

பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்...

நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்...

நான் என்னை மறந்தேன்...

நான் வார்த்தை இழந்தேன்...

கண்ணருகே இமையிருந்தும் கனவு காண்பதேன்...

கண்ணருகே இமையிருந்தும் கனவு காண்பதேன்...

உங்கள் கையருகே மங்கை வந்தும் கதைகள் சொல்வதேன்...

உங்கள் கையருகே மங்கை வந்தும் கதைகள் சொல்வதேன்...

வாய் மலர்ந்து சிரித்ததம்மா காதலன் கிளியே...

இங்கே காய்ந்திருந்தும் கனிந்ததம்மா மாதுளங்கனியே...

மாதுளங்கனியே...

காதலன் கிளியே...

இனி மயங்கும் இன்ப இரவினிலே வாலிப திரு நாள்...

வாலிப திரு நாள்...

வடிவத்தோடு மனதும் சேரும் வாழ்வினில் ஒரு நாள்..

இனி மயங்கும் இன்ப இரவினிலே வாலிப திரு நாள்...

வாலிப திரு நாள்...

வாலிப திரு நாள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக