பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 11 ஜூன், 2010

ராஜ ராஜேஸ்வரி அருகில் ராஜ ராஜேஸ்வரன்...ராஜ ராஜேஸ்வரன்...

வணக்கம் அன்பர்களே,
சொன்னது போல ஜுன் மாதம் வந்து விட்டேன். இந்த முறை நிறைய பாடல்களை தரமிறக்க சபதம் எடுத்திருக்கிறேன். உங்கள் ஆதரவு மட்டுமே தேவை. தொடர்ந்து பாடல்களை கேட்டு மகிழுங்கள்.

திரைப் படம்: அவளுக்குள் ஒரு ரகசியம்

இசையமைப்பு: விஜய பாஸ்கர்
இது ஒரு வெளிவராத திரைப் படம் என்று நினைக்கிறேன். ஆனால் இனிமையான பாடல் இது.
சிலர் இந்த படத்தின் இசையமைப்பாளர் திரு சந்திர போஸ் என்கிறார்கள். யாராயிருந்தால் என்ன. அவருக்கு நமது நன்றி.
http://www.divshare.com/download/11669771-f22ராஜ ராஜேஸ்வரி அருகில் ராஜ ராஜேஸ்வரன்...ராஜ ராஜேஸ்வரன்...


ராஜ ராஜேஸ்வரன் நினைவில் ராஜ ராஜேஸ்வரி...ராஜ ராஜேஸ்வரி...

கற்பனைக்கு ஓர் உருவம் கண்மணி வடிவம்...

அற்புதக் கவித் தூறும் ஆனந்தக் கலசம்...

கற்பனைக்கு ஓர் உருவம் கண்மணி வடிவம்...

அற்புதக் கவித் தூறும் ஆனந்தக் கலசம்...

நற்றவம் புரியாமல் நான் இன்று அடைந்தேன்...

நாயகன் உனக்காக வாழ்ந்திட பிறந்தேன்...

ராஜ ராஜேஸ்வரன் நினைவில் ராஜ ராஜேஸ்வரி...ராஜ ராஜேஸ்வரி...

சித்திரப் பூஞ்சோலை சிரிக்கின்ற மாலை....

சிந்தனை அமுதூறி அழைக்கின்ற வேளை...

சித்திரப் பூஞ்சோலை சிரிக்கின்ற மாலை....

சிந்தனை அமுதூறி அழைக்கின்ற வேளை...

முத்துரை பசும் பொன்னை முத்தங்கள் இடவா...

நித்திரை சுகம் என்று நான் இங்கு தரவா..

லா லா லா லா லா லா லா .....

மாணிக்க தேரேறி மன்னவன் வந்தான்...

மாவிலை தோரண வாசலில் நின்றான்...

நாணித் தலை சாய்ந்தாள்....

நாணித் தலை சாய்ந்தாள்....

நங்கை அவள்...நடமாடி வருகின்ற தோகை மகள்...

ராஜ ராஜேஸ்வரி அருகில் ராஜ ராஜேஸ்வரன்...ராஜ ராஜேஸ்வரன்...

ராஜ ராஜேஸ்வரி......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக