பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 22 ஜூன், 2010

மௌனம் மௌனம் மௌனத்தினாலே

ஒரு மனைவியின் கனவுகள்


திரைப் படம்:   வளர் பிறை (1962)

இசை: K V மகாதேவன்

இயக்கம்: D யோகானந்த்

பாடியவர்: P சுசீலாhttp://www.divshare.com/download/11782411-a3a


மௌனம் மௌனம் மௌனத்தினாலே

வணங்குகிறேனைய்யா...

மௌனம் மௌனம் மௌனத்தினாலே

வணங்குகிறேனைய்யா....

என் மனதினில் ஓடும் நதியினில் மூழ்கி

மயங்குகிறேனைய்யா ...

மௌனம் மௌனம் மௌனம்உறக்கத்திலும் உன்னைப் பார்த்திருக்கும் என்

உறவினைச் சொல்வேனா...

நான் ஒவ்வொரு நாளும் உன்னுடன் வாழும்

ஒவ்வொரு நாளும் உன்னுடன் வாழும்

உரிமையை சொல்வேனா...

மௌனம் மௌனம் மௌனத்தினாலே

வணங்குகிறேனைய்யா....பிறக்கும் குழந்தையும் உன் வடிவாக

பிறந்திட வேண்டுமையா...

அவன் சிரிக்கும் பொழுதும் உன் முகம் போலே

சிரிக்கும் பொழுதும் உன் முகம் போலே

சிரித்திட வேண்டுமையா...

மௌனம் மௌனம் மௌனம்இருக்கும் வரைக்கும் உன்னருகே நான்

இருந்திட வேண்டுமையா...

உயிர் பறக்கும் பொழுதும் உன் மடிமேலே

பறக்கும் பொழுதும் உன் மடிமேலே

பறந்திட வேண்டுமையாமௌனம் மௌனம் மௌனத்தினாலே

வணங்குகிறேனைய்யா....

என் மனதினில் ஓடும் நதியினில் மூழ்கி

மயங்குகிறேனைய்யா ...

மௌனம் மௌனம் மௌனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக