பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 27 ஜூன், 2010

பந்தல் இருந்தால் கொடி படரும்...

அமைதியான இசையுடன் ஆர்ப்பாட்டம் இல்லாத பாடல்களில் ஒன்று.


திரைப் படம்;  பந்த பாசம்  (1962)

இசை: M S விஸ்வ நாதன் , T K ராமமுர்த்தி

நடிப்பு; சிவாஜி, தேவிகா, சாவித்ரி, சந்த்ரகாந்தா

இயக்கம்: பீம்சிங்க்

பாடியவர்கள்: TMS , S ஜானகி



Free Music - Play Audio -












பந்தல் இருந்தால் கொடி படரும்...

பாலம் அமைந்தால் வழி தொடரும்...

பந்தல் இருந்தால் கொடி படரும்...

பாலம் அமைந்தால் வழி தொடரும்...

கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்...

இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்...

பந்தல் இருந்தால் கொடி படரும்...

பாலம் அமைந்தால் வழி தொடரும்...



நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும்..

நிலைமையும் அதனை மறைத்திருக்கும்...

நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும்..

நிலைமையும் அதனை மறைத்திருக்கும்...

காலம் வந்தால் காய் பழுக்கும்...

காத்திருந்தால் கனி கிடைக்கும்...



பந்தல் இருந்தால் கொடி படரும்...

பாலம் அமைந்தால் வழி தொடரும்...

கடல் நடுவே நீர் மீன் பிடிக்கும்..

இரு கண்களும் இமையிடம் எதை கேட்கும்...

கன்னியின் உள்ளம் ஏன் மயங்கும்...

அவள் கண்ணம் இரண்டும் ஏன் சிவக்கும்...



காதல் நெருப்பில் குளித்திருக்கும்...

அன்பு கண்ணிரெண்டும் அதில் படிந்திருக்கும்...

கோமள மாம்பழ கண்ணத்திலே இதழ்

குங்குமத்தை அள்ளி இறைத்திருக்கும்...

குங்குமத்தை அள்ளி இறைத்திருக்கும்...



பந்தல் இருந்தால் கொடி படரும்...

பாலம் அமைந்தால் வழி தொடரும்...



இடைத் தழுவும் கைகள் மாலைகளோ...

உங்கள் இதய தளம் வண்ண மலரணையோ...

மடைத் திறக்கும் அன்பு வார்த்தைகளோ...

சிந்தும் வார்த்தையெல்லாம் அங்கு காவல்களோ...



கண்ணிரண்டும் ஒளி விளக்குகளோ...

இரு கனியிதழ் ரத்தின கதவுகளோ...

கண்ணங்களும் தங்க பாலங்களோ...

என் காதலுக்கே தந்த பரிசுகளோ...

காதலுக்கே தந்த பரிசுகளோ...



பந்தல் இருந்தால் கொடி படரும்...

பாலம் அமைந்தால் வழி தொடரும்...

கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்...

இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக