பின்பற்றுபவர்கள்

சனி, 12 ஜூன், 2010

அன்புள்ள மான்விழியே...ஆசையில் ஓர் கடிதம்...

குழந்தையும் தெய்வமும்


எழுதியவர்: வாலி


இசை:MSV

பாடியவர்கள்: TMS, PShttp://www.divshare.com/download/11679008-638


அன்புள்ள மான்விழியே...ஆசையில் ஓர் கடிதம்...நான் எழுதுவது என்னவென்றால் உயிர் காதலில் ஓர் கவிதை...


அன்புள்ள மன்னவனே ...ஆசையில் ஓர் கடிதம்...அதை கைகளில் எழுதவில்லை...இரு கண்களில் எழுதி வந்தேன்...

நலம் நலம்தானா முல்லை மலரே...சுகம் சுகம்தானா முத்து சுடரே...இளய கன்னியின் இடை மெலிந்ததோ எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ..வண்ணப்பூங்கொடி வடிவம் கொண்டதோ வாடை காற்றிலே வாடி நின்றதோ...

அன்புள்ள மான்விழியே...ஆசையில் ஓர் கடிதம்...நான் எழுதுவது என்னவென்றால் உயிர் காதலில் ஓர் கவிதை...

நலம் நலம்தானே நீ இருந்தால் சுகம் சுகம்தானே நினைவிருந்தால்...இடை மெலிந்தது இயற்கை அல்லவா நடை தளர்ந்தது நாணம் அல்லவா.. வண்ணப்பூங்கொடி பெண்மை அல்லவா.. வாட வைத்ததும் உண்மை அல்லவா...

அன்புள்ள மான்விழியே...

ஆசையில் ஓர் கடிதம்...

அதை கைகளில் எழுதவில்லை...

இரு கண்களில் எழுதி வந்தேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக