பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 15 ஜூன், 2010

ஒரு கோடி சுகம் வந்தது.. அது ஒவ்வொன்றும் நீ தந்தது...

இந்த பாடல் ரொம்பவும் அபூர்வமான பாடலாகிப் போனது. 1977 ல் வெளிவந்தாலும் சிறந்த பாடல் வரிசையில் வந்தாலும் அவ்வளவாக பிரபலம் அடையவில்லை.

திரைப் படம்:  மழை மேகம் (1977)

இசை: K V மகாதேவன்

குரல்கள்: A L ராகவன், S ஜானகி

நடிப்பு: முத்துராமன், சாரதா
http://www.divshare.com/download/11709589-2a2

ஒரு கோடி சுகம் வந்தது.. அது ஒவ்வொன்றும் நீ தந்தது...

ஒரு கோடி சுகம் வந்தது.. அது ஒவ்வொன்றும் நீ தந்தது...

இது புது உறவு...இன்று முதலிரவு...அதில் மனனிறைவு நீ தந்தது...

இது புது உறவு...இன்று முதலிறவு...அதில் மனனிறைவு நீ தந்தது...

ஒரு கோடி சுகம் வந்தது.. அது ஒவ்வொன்றும் நீ தந்தது...

விழி வானம் உனைத்தேட தளிர் மேனி தள்ளாட தேன் சிந்தும் பெண்மை அல்லவோ..

வருங்கால நிலையென்னும் சிருங்கார கலையன்னம் இளமைக்கு தூது செல்லவோ...

மலர் சிரிப்பதென்ன மஞ்சம் அழைப்பதென்ன மனம் கேட்பதென்ன..அதை நான் சொல்லவோ...

ஒரு கோடி சுகம் வந்தது.. அது ஒவ்வொன்றும் நீ தந்தது...

கணக்கின்றி கிடைத்தாலும் கண்மூடி ரசித்தாலும் அடங்காத தாகமல்லவோ..

விளக்கின்றி படித்தாலும் விடிந்தாலும் தொடர்ந்தாலும் இனிக்கின்ற கதையல்லவோ...

இன்பம் தொடர்க்கதையோ நெஞ்சை தொடும் கதையோ...அதை படிப்பதற்க்கு நான் துணை வரவோ..

ஒரு கோடி சுகம் வந்தது.. அது ஒவ்வொன்றும் நீ தந்தது...

தளராத நெஞ்சோடு தன்மான பண்போடு நான் கண்ட ஜெயம் அல்லவோ...

வளமான எதிர்க்காலம் வரவேற்க உன்னோடு நான் கண்ட வழியல்லவோ...

உன்னை வாழ்த்தட்டுமா...

என்னை வணங்கட்டுமா..

அதில் மயங்கட்டும..

உலகை மறக்கட்டுமா...

ஒரு கோடி சுகம் வந்தது.. அது ஒவ்வொன்றும் நீ தந்தது...

இது புது உறவு...இன்று முதலிரவு...அதில் மனனிறைவு நீ தந்தது...

ஒரு கோடி சுகம் வந்தது.. அது ஒவ்வொன்றும் நீ தந்தது...

இது புது உறவு...இன்று முதலிரவு...அதில் மனனிறைவு நீ தந்தது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக