பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 13 ஜூன், 2010

உயிர் நீ உனக்கொரு உடல் நான்

PS குரலில் மற்றுமொரு இனிமையான பாடல்


படம்: பெண்ணே நீ வாழ்க (1967)

இயக்கம்: P. மாதவன்

இசை:கே.வீ.மகாதேவன்

நடிப்பு: ஜெயசங்கர், கே.ஆர்.விஜயா.

உயிர் நீ உனக்கொரு உடல் நான்

உடல் தொட்டால் இன்பக் கடல் நான்

வளைந்தால் கொடி போல் வளைவேன் நான்

விழுந்தால் மடி மேல் விழுவேன் நான்

உயிர் நீ உனக்கொரு உடல் நான்

உடல் தொட்டால் இன்பக் கடல் நான்

வளைந்தால் கொடி போல் வளைவேன் நான்

விழுந்தால் மடி மேல் விழுவேன் நான்

என்னை வரச்சொல்லி துணை பெறச் சொல்லி

வரைந்தாய் காதல் தூது

என்னை வரச்சொல்லி துணை பெறச் சொல்லி

வரைந்தாய் காதல் தூது

மனமெனும் கதவை விழி வழி திறந்து

புகுந்தேன் நான் இப்போது

அரும்பாய் மலராய் காயானேன்

அரும்பாய் மலராய் காயானேன்

கனியாய் உனக்கே விருந்தானேன்

உயிர் நீ உனக்கொரு உடல் நான்

உடல் தொட்டால் இன்பக் கடல் நான்

வளைந்தால் கொடி போல் வளைவேன் நான்

விழுந்தால் மடி மேல் விழுவேன் நான்

பிறந்தது பிறந்தாள் உனக்கெனப் பிறந்தாள்

வளர்ந்தாள் காதல் அமுதம்

பிறந்தது பிறந்தாள் உனக்கெனப் பிறந்தாள்

வளர்ந்தாள் காதல் அமுதம்

கனவிலும் தொடர்ந்தே நிழலென நடந்தே

வருவாள் வாழ்வு முழுதும்

கோயில் கோபுரச் சிலையானாள்

கோயில் கோபுரச் சிலையானாள்

காதலன் அன்புக்கு விலையானாள்

உயிர் நீ உனக்கொரு உடல் நான்

உடல் தொட்டால் இன்பக் கடல் நான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக